லியோ படத்திற்கு முட்டுக்கட்டை போடும் வாரிசு பட தயாரிப்பாளர். லியோ தயரிப்பாளர் பேச்சு வார்த்தை

0
1690
- Advertisement -

லியோ திரைப்படத்திற்கு அவரின் முந்தைய படத்தின் தயாரிப்பாளரே முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்பவர் தன் தில்ராஜு அவர் விஜயின் வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார் மேலும் அவர் படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி பல படங்களை வாங்கி ஆந்திராவில் விநியோகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார். மேலும் ஆந்திராவில் நிறைய திரையரங்குகள் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

வாரிசு திரைப்படம்:

வாரிசு படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. படத்தில் மிகவும் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே தந்தை பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருக்கிறார்கள். ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார். இந்த திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்து இருந்தார்.

லியோ திரைப்படம்:

தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தை வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது லியோ திரைப்படம்.

-விளம்பரம்-

லியோ vs தில் ராஜூ:

தில் ராஜூ தற்போது ஆந்திராவில் விஜயின் திரைப்படம் லியோ திரைப்படம் வெளியவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரித்த வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் தற்போது லியோ படத்தை தயாரித்துள்ள லலித்குமார் 7 ஸ்கிரின் நிறுவனம் தான் வெளியிட்டது. அப்போது அவர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Dilraju

அதன் காரணமாகவே லலித்குமார் தயாரித்த லியோ திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு தில் ராஜ் போர்குடி தூக்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கொடுக்கவ மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில லியோ திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் இது பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement