லியோ பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? விஜயை அடுத்து அதிக சம்பளம் வாங்கிய நடிகர்

0
532
- Advertisement -

லியோ படத்தில் நடிகர்கள் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

ஆனால், லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்றும் உத்தரவு போட்டிருந்தார்கள். மேலும், இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

லியோ நடிகர்கள் வாங்கிய சம்பளம்:

இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. லியோ படத்திற்காக விஜய் அவர்கள் 120 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தால் இவர் நடிக்கும் அடுத்த படத்தில் 150 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரை அடுத்து அதிக சம்பளம் வாங்கி இருப்பவர் சஞ்சய் தத்தான். இவர் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர். இவரும் விஜய் போலவே பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோவாக மிரட்டி இருந்தார். சொல்லப்போனால் கே ஜி எஃப் படத்தில் வில்லன் இவர்தான்.

திரிஷா-அர்ஜுன் சம்பளம்:

லியோ படத்தில் ஆண்டனி தாஸ் எட்டு கோடி வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார். மேலும் தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்படும் திரிஷா 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். அர்ஜுன் இந்த படத்தில் ஹரால்ட் தாஸ் என்ற பயங்கர கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒரு கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் நடித்திருக்கும் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் போன்ற பலரும் 50-70 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement