என்னை பார்த்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களே அப்படி கேட்டிருக்காங்க, அதையே பிஸ்னஸ் ஆக்கிட்டோம் – சினேகன் மனைவி கன்னிகா ஷேரிங்

0
291
- Advertisement -

தான் துவங்கி இருக்கும் புதிய பிஸ்னஸ் குறித்து சினேகன் மனைவி கன்னிகா கூறியுள்ளார். ‘கடந்த ஒரு வருடமாகவே ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். இறுதியாக உழைப்பாளர் தினத்தில் தொடங்கி விட்டோம். என் குடும்பமே ஒரு பிசினஸ் குடும்பம் தான். நானும் எப்போதும் சும்மா இருக்க மாட்டேன், ஏதாவது செய்துகொண்டே இருப்பேன். சிறு வயதிலேயே டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் எல்லாம் செய்து இருக்கிறேன்.

-விளம்பரம்-

சினிமா என்பது நிலையான வருமானம் கிடையாது. நமக்கென்று ஒரு பிசினஸ் துவங்கலாம் என்று யோசித்த போது தான் இந்த ஹேர் ஆயில் பிசினஸ் ஐடியா வந்தது. என்னை பார்ப்பவர்கள் எல்லாருமே எப்படி முடி இவ்வளவு நீளமாக இருக்கிறது என்று கேட்பார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட இப்படி கேட்டு இருக்கிறார்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய தங்கை அம்மா என்று எல்லாருக்குமே நீளமாக முடி இருக்கும் எங்கள் வீட்டில் பாட்டி அவரே ஹேர் ஆயில் தயார் செய்து எங்களுக்கு கொடுப்பார்.

- Advertisement -

அதை பயன்படுத்தி தான் எங்களுக்கு இப்படி நீளமான ஆரோக்கியமான முடி வளர்ந்தது. பாட்டி நமக்கு செய்ததை நாமே செய்யலாம் என்று இந்த பிசினஸை ஆரம்பித்தேன். மேலும் ஹேர் ஆயில் என்றாலே கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படும் என்பதால் சில சித்த மருத்துவர் இடமும் ஆலோசித்து அதன் பின்னரே பரிசோதனைக்காக மாதிரிகளை அனுப்பி வைத்தேன். ஆனால் முதல் பரிசோதனையிலேயே எங்களுடைய ஹேர் ஆயில் தேர்ச்சி அடைந்து விட்டது.

அதேபோல சினேகன் கன்னிகாவின் புதிய ஹேர் ஆயில் பிசினஸை துவங்கியதுமே 200 எம்எல் ஹேர் ஆயிலில் விலை தள்ளுபடி விலையில் 999 என்று பார்த்தவுடன் பல ரசிகர்களும் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தார்கள். மேலும், நயன்தாராவின் பிஸ்னஸ் பொருட்களை விட விலை அதிகமாக இருப்பதாகவும் கூறி வந்தனர். இதற்கு பதில் அளித்த கன்னிகா ‘விலை அதிகமாக இருப்பதற்கு தரம் தான் காரணம்.

-விளம்பரம்-

பெரும்பாலான ஹேர் ஆயில் கம்பெனிகள் உலர்ந்த மூலிகைகளை பயன்படுத்துவார்கள். அதனால் அது விலை குறைவாக இருக்கும் ஆனால் நாங்கள் அனைத்து மூலிகைகளையும் மிகவும் பிரஷ்ஷாக பயன்படுத்துகிறோம். செம்பருத்தி, துளசி, சின்ன வெங்காயம், ரோஜான்னு எல்லாமே ஃப்ரெஷ்ஷா போட்டு காய்ச்சுறோம். அதனை காய்ச்ச அதிக நேரம் எடுக்கும். அதன் பின்னரே அதில் உள்ள சத்துக்களை பயன்படுத்துகிறோம்.

அதேபோல இந்த ஆயிலை தினமும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும் முடி கொட்டுவது நின்று விடும் இதற்கெல்லாம் தாண்டி 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டுகிறோம் மேலும் இந்த தயாரிப்பில் பார்த்திருக்கும் மேற்பட்ட பணியாளர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு சம்பளம் தயாரிப்பு செலவு என்று அனைத்தும் சேர்ந்து விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement