பல ஆண்டுக்கு முன்பே விஜய் படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம் x லியோ Funny கனக்க்ஷன். வைரலாகும் வீடியோ இதோ.

0
1568
Leo
- Advertisement -

விக்ரம் மற்றும் லியோ படத்தை ஒப்பிட்டு விஜய் ரசிகர்கள் ஷாஜஹான் படத்தை எல்லாம் தோண்டி எடுத்து வருகின்றனர். மிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் சேர்ந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் நான் ரெடி பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. மேலும், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியதில் இருந்தே இந்த படம் lcuவில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது.

இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை எல்லாம் தோண்டி எடுத்து அதற்கும் லியோ படத்திற்கும் எதாவது சம்மந்தம் இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விக்ரம் படத்தில் வரும் கஞ்சா மூட்டையில் இருக்கும் தேள் சிம்புளையும் லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடலில் இடம்பெற்ற தேள் கொட்டும் சிங்கம் என்ற வரியை எல்லாம் ஒப்பிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இதே பாடலில் தாஸ் & கோ என்று இடம்பெற்று இருக்கும் குறியீடையும் Lcuவில் கனக்ட் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் மேலே சென்று விஜய் நடித்த ஷாஜகான் படத்தையம் விட்டுவைக்கவில்லை. விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ஒரு காட்சியில் லியோ மற்றும் விக்ரம் என்று சுவற்றில் இடம்பெற்ற பெயரை எல்லாம் தேடி பிடித்து லியோ கண்டிப்பாக lcu தான் என்று கூறி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அங்கே மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மாணவர் ஒருவர் ‘லியோ படம் ‘எல்.சி.யூ.’ வில் வருமா?’ என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. இப்போதே அனைத்தையும் சொல்லிவிட்டால், பின்னர் சொல்வதற்கு வேறு எதுவும் இருக்காது. அதனால் கொஞ்சம் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement