சினிமாவில் அறிமுகமாகும் லியோனி மகன்.! அதிலும் இந்த மாஸ் ஹீரோ படத்தில்.!

0
360
leone

கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிலும் கால் பதித்து வருகின்றனர். விக்ரம் மகன் துருவ், எம் எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் என்று பல இளம் புதுமுக நடிகர்கள் சினிமாவில் விஜயம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாரும் சினிமாவில் கால் பதிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரித்து, விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். காயத்ரி கதநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று நடிகராக சிவகுமார் சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தேனியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.