அஜித்த ஒரிஜினலா தாடி வளக்க சொன்ன , மாதவன் தான் பர்ஸ்ட் சாய்ஸ். பிரபல ஆக்ஷன் பட இயக்குனர் பேட்டி.

0
49948
ajithji
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார் தல அஜித். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படம் பட்டையை கிளப்பியது. தற்போது அஜித் அவர்கள் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for ajith ji movie

- Advertisement -

இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ஜீ. இந்தப் படத்தில் அஜித் திரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ரன் திரைப்படப் புகழ் லிங்குசாமி அவர்கள் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இதையும் பாருங்க : கொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா – ஆல்யாவிற்கு ரசிகர்கள் அட்வைஸ்.

-விளம்பரம்-

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் அஜித்தின் ஜி படம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கூறி இருந்தார். அதில் அவர் சொன்னது, இந்த படத்தை முதலில் நான் மாதவனுக்காகத் தான் பண்ணி இருந்தேன். அவரிடம் கதை சொல்லி இருந்தேன். ஆனால், அவர் இரண்டாம் பாகம் கதையை கொஞ்சம் மாற்றுங்கள் என்று சொல்லியிருந்தார். நான் சரியாகத் தான் இருக்கிறது ஏன் மாற்ற சொல்கிறார் என்று கூட எனக்கு தோணுது. அந்த படத்தில் உடம்பை குறைத்து, மாணவனாக நடிக்க வேண்டும் என்று விதிமுறை வைத்தேன். அந்த கதாபாத்திரத்தில் முதலில் மாதவன், சித்தார்த் இவர்கள் இருவரை தான் நினைத்திருந்தேன்.

வீடியோவில் 8 : 50 மற்றும் 16:05 நிமிடத்தில் பார்க்கவும்

பிறகு தான் அஜித் அவர்களிடம் இந்த படத்தை பற்றி சொன்னேன். அவரிடம் கதை சொல்லும் போதே தாடி வளர்க்க வேண்டும், உடம்பை குறைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இந்த கண்டிஷன் சொல்லி தான் நான் அவர்கிட்ட கதை சொன்னேன். ஆனால், அவரால் உடம்பு குறைக்க முடியவில்லை. பிறகு எனக்கும் கொஞ்சம் சரியாக போகுமா என்ற கேள்வி எழுந்தது. இதை பற்றி அஜித் இடம் கேட்டபோது அவர் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். அவர் எதுவாக இருந்தாலும் நீங்க சொன்னபடி செய்கிறேன் என்று சொல்வார்.

எடுத்த ஷாட்டாக இருந்தாலும் திருப்பி எடுத்தால் கூட ஏன் என்று கேள்வி கேட்கமாட்டார். அந்த படம் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் நான் தான் என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் விட்டு விட்டார். அப்ப வந்து ரேஸில் அவர் அதிக கவனம் செலுத்தி இருந்தார். அந்த நேரத்திற்கு ஷாட் எடுக்காதது, படத்தில் ஒரு ஸ்கிரிப்ட் மேஜிக் இல்லாததும் காரணம் என்று சொல்லலாம். மேலும், படம் 2 வருடம் வரை போனதது. ரன் மிகப்பெரிய ஹிட் ஆன நம்பிக்கையா? தலகனமா? என்று தெரியவில்லை. படம் வெளிவருவதற்கு முன்பே வித்யாசாகர் படத்தின் நீளம் கொஞ்சம் குறைங்க என்று சொன்னார். ஆனால், நான் அப்போது கேட்கவில்லை. ஜி படம் மாபெரும் ஒபனிங்காக வெளியானது. ஆனால், ஜி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்கவில்லை.

ரன் படத்தின் வெற்றியினால் திமிரு ஏரியாத? என்று தெரியவில்லை. ரன் படம் கொடுத்து அளவுக்கு ஜி படம் இல்லை. மாயை, மயக்கம், பயம் அதனால் தான் எனக்கு ஜி படம் தோல்வி அடைந்தது என்று கூறினார்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். இவர் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு 2001ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானர். இவர் சொந்தமாக திருப்பதி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

Advertisement