20 ஆண்டுகளுக்கு முன் விஜயை வைத்து இயக்கிய இயக்குனர்.! தற்போது விஜய் ரசிகரை வைத்து எடுக்கிறார்.!

0
745
Vijay

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. சாதாரண ரசிகர்களை தாண்டி அவருக்கு சினிமாவிலும் நடிகர்களில் சிலர் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஜி வி பிரகாஷும் ஒருவர்.

இவர் விஜ்ய்யின் ரசிகர் என்பதை விட விஜய்யின் வெறியர் என்றே சொல்லலாம். விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார். மேலும், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘சர்வம் தாளமயம் ‘ படத்தில் தீவிர விஜய் ரசிகராகவும் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது விஜய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஜி வி பிரகாஷ். இயக்குனர் எழில், இயக்கிய முதல் படமான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தை இயக்கினார் எழில்.

முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த எழில் அதன் பின்னர் பிரபு தேவா அஜித், சூர்யா போன்றவர்களை வைத்து பல படங்களை இயக்கினார். துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆன நிலையில் தற்போது விஜய் ரசிகரான ஜி வி பிரகாஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை எளிமையாக கோயிலில் நேற்று (பிப்ரவரி 15)நடைபெற்றது. சி.சத்யா இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement