6 மாதம் சிறை என்று வெளியான செய்தி குறித்து லிங்குசாமி அளித்த விளக்கம். உண்மை என்ன ?

0
287
Lingu
- Advertisement -

லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் இயக்குனர் லிங்குசாமி குறித்த சர்ச்சை வைரலாகி வருகிறது. அதாவது, 2014 ஆம் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் உருவாக இருந்த படம் எண்ணி ஏழு நாள். இந்த படத்தை தயாரிக்க லிங்குசாமி அவர்கள் நான் ஈ, இரண்டாம் உலகம் போன்ற படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கடனாக வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

பின் லிங்குசாமி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்திருந்தார். இந்த காசோலையை வங்கியில் கொடுத்த போது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதனால் பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து இருக்கிறது. அப்போது இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

- Advertisement -

காசோலை மோசடி வழக்கு:

மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது. இந்த வழக்கை எதிர்த்து லிங்கு சாமி மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்குசாமியின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து அவருக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனை உறுதி செய்து உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து லிங்கு சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லிங்குசாமி அறிக்கை :

அதில் ‘இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கில் பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானதுஅவர்கள் கொடுத்த மேல்முறையீட்டில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஹிட் இயக்குனர் சரிந்த கதை :

லிங்குசாமி, முதன் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

ஆனால், அஞ்சான் படத்திற்கு பின்னர் இவர் பல ஆண்டுகளாக தமிழில் படத்தை இயக்கவில்லை. பின்னர் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தார். ஆனால், அதுவும் மாபெரும் தோல்வியை தழுவியது. இவர் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

Advertisement