ஜோதிகா நடித்த லிட்டில் ஜான் படம் ஞாபகம் இருக்கா.! அதில் நடித்த ஹீரோ இப்போ எப்படி இருக்கார் பாருங்க.!

0
113172
little-john
- Advertisement -

சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள் அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல நடிகர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்தவர்கள் உண்டு.2001 ஆம் ஆண்டு வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் பென்ட்லி மிச்சம், ஜோதிகா, அனுபம் கெர், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகிய பல நடிகர்கள் நடித்துள்ளனர்.மேலும், இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், இந்தி. ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரை உலகிற்கு கொண்டு வந்தார்கள். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அதிக வசூலையும் பெற்று தந்தது. அந்த லிட்டில் ஜான் படத்தில் நடித்த ஹீரோ பென்ட்லி மிட்சம் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

- Advertisement -

பென்ட்லி மிட்சம் 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற நகரில் பிறந்தவர். இவருடைய தந்தை கிரிஸ்டோப மிட்சம். இவர் ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆவர். பென்ட்லி மிச்சம் என்பவருக்கு கியான் மிட்சம் என்ற சகோதரனும் ,ஜெனிஃபர் மிச்சம் மற்றும் கேரிங் மிட்சம் என்ற இரு சகோதரிகளும் உள்ளார்கள். இவர்கள் கூட நடிகர்களாகவும், மாடலிங் செய்பவர்களாகவும் உள்ளார்கள். இவங்க மட்டும் இல்லாம இவர்களுடைய தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என ஒட்டுமொத்த உறவினர்களும் சினிமா துறையில் தான் அதிகம் பங்கு வகிக்கின்றனர். ஒட்டுமொத்த குடும்பமும் நடிகர்கள் , நடிகைகள், மாடலிங் என கலை துறையில் உள்ளனர்.இந்த மொத்த குடும்பமும் கலை குடும்பமாகவே திகழ்ந்து வருகிறது.

பென்ட்லி மிட்சம் தன்னுடைய பட்டப்படிப்பை யுனிவர்சிட்டி ஆஃப் சவுத் கலிபோர்னியாவில் முதுகலை படிப்பு பொருளாதாரத்தைப் பற்றி படித்து முடித்தார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தான் நடிக்க தொடங்கினார்.மேலும், 1985 ஆம் ஆண்டு “ப்ராமிஸ் டு கீப் ” என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பல பிரபலமான தொலைக்காட்சிகளில் உள்ள சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.அதற்கு பின் 1989 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா கிறிஸ்டோப மிட்சம் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார்.
1991ல் ஆம் ஆண்டு ‘போறீஓவெர்ஸ்(borrowers ) ‘ என்ற படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-
Image result for bentley mitchum instagram

அதன் மூலம் அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். 1997 ஆம் ஆண்டு இவர் நோல்லி பேக்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஹலோனோ மிட்சம் என்ற மகளும் உள்ளார். 2002ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது லிட்டில் ஜான் படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக பென்ட்லி மிட்சம் நடித்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும்,2003ம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக நோல்லி பேக்வார்,பென்ட்லி மிட்சம் ஆகிய இருவருக்கும் விவாகரத்து நடந்தது.பின் 2004இல் ஜெய் மார்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Related image

இவர்களுக்கு கேரிங்டோன் மிட்சம் என்ற ஒரு மகளும் உள்ளார். இவர் 2001ம் ஆண்டு கிராக் இன் தி புலோர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து 2007இல் வாக்கிங் டால் என்ற டிவி நிகழ்ச்சியிலும் நடத்தி வந்தார். இதற்கு பிறகு 2011ம் ஆண்டு ‘ஒன் ‘ என்ற ஷார்ட் பிலிம் எடுத்து பிரபலமானர். அதற்குப்பின் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ritual படத்தை இயக்கியுள்ளார். மேலும், 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து இவர் நடிகர் , ஷார்ட் பிலிம், டைரக்சன், டிவி சீரியல், என பல துறைகளில் பயணம் செய்து கொண்டுள்ளார்.

Advertisement