டி.ஆர் தாடி, பிட்டான பாடி, முகத்தை மூடி திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சிம்பு – வீடியோ இதோ.

0
17965
simbu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார்.

- Advertisement -

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு, திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு சென்ற போது அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து வீடியோ எடுத்தனர். இதனால் முகத்தை மூடிக்கொண்டு சென்றுவிட்டார் சிம்பு. இருப்பினும் சிம்புவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் டி ஆரை போல தாடியுடன், பழைய சிம்புவை போல உடல் எடை குறைத்து படு மாஸாக இருக்கிறார் சிம்பு. இதே போல சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுகும் சென்றுள்ளார். மாநாடு படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் நடிகர் சிம்பு மீசை இல்லாமல் தான் நடிக்கிறார். ஆனால், சிம்புவின் இந்த லுக்கை பார்க்கும் போது மாநாடு படத்தில் சிம்புவிற்கு இரண்டு லுக்கா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement