படம் வெளியாகும் முன்பே கார், வெளிவராத படத்திற்கு பல லட்சம் சம்பளம். சம்பளத்தை 100ரூபாய் நோட்டுகளாக கேட்ட லிவிங்ஸ்டன். காரணம் என்ன தெரியுமா?

0
446
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். ஆரம்பத்தில் திரைப்படங்களுக்காக இவருடைய பெயரை ராஜன் என்று பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது,நான் சினிமாவில் ஹீரோவானதே ஒரு பெரிய கதை. ஒரு லட்சியத்தால் வைராக்கியதால் தான் நான் ஹீரோ ஆனேன். விஜயகாந்த் சார், நான், இன்னும் மூணு பேர் ரயில் பயணத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் தான் முதன் முதலாக நான் ஹீரோவா பண்ணனும் என்று நினைக்கிற விருப்பம் வாய் திறந்து பேசுகிறேன்.

- Advertisement -

நான் சொன்னதும் பக்கத்தில் இருந்த அந்த மூன்று பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். எனக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது. நான் கூனிக்குறுகி இருப்பதை பார்த்த விஜயகாந்த் சார் கண் சிவந்து விட்டது. அவர்களை பார்வையாலேயே முறைத்தார். இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என்று அவர்களை திட்டினார். அந்த நிமிஷம் எனக்குள்ள ஒரு வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்தையாவது நாம் நடித்து காட்டனும் என்று முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல கேப்டன் விஜயகாந்த் தனக்கு சம்பளத்தை மூட்டையில் கட்டிக் கொடுத்த சம்பவம் குறித்தும் பேசி இருந்தார். லிவிங்ஸ்டன் நடித்த சுந்தர புருஷன் படம் 100 நாட்கள் ஓடியதை தொடர்ந்து லிவிங்ஸ்டனை அழைத்து தன்னுடைய கம்பெனிக்கு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க அணுகி இருக்கிறார் விஜயகாந்த். மேலும் அந்த படத்திற்கு ‘உனக்கும் எனக்கும் கல்யாணம்’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டது. ஆனால் அந்த படம் சில பல காரணத்தால் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்த படத்தின் போது என்னுடைய ஹீரோ பைக்கில் செல்லக்கூடாது என்று தன்னுடைய நண்பனான ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் கேப்டன். அந்த படத்தில் நடிக்கும் வரை வெறும் 15000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த லிவிங்ஸ்டனுக்கு 7.5 லட்சம் சம்பளமாக கொடுத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் கேப்டன். அதுவும் அந்த 7.5 லட்சம் பணத்தை 100 ரூபாய் நோட்டுகளாக கொடுக்க வேண்டும் என்று லிவிங்ஸ்டன் கேட்டிருக்கிறார்.

இதற்கான காரணத்தை கேப்டன் கேட்டுள்ளபோது தன்னுடைய அம்மாவிடம் நிறைய பணம் சம்பாதிப்பேன் என்று கூறிவிட்டு வந்ததாகவும் அதனால் அவர்களிடம் 100 ரூபாய் நோட்டாக காட்டினால் மிகவும் மகிழ்ச்சியாடி அவர்கள் என்றும் லிவிங்ஸ்டன் கேட்டுக் கொண்டதால் விஜயகாந்த்தும் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றி ஒரு மூட்டையில் கட்டிக் கொடுத்துள்ளார். அந்த மூட்டையை தன்னுடைய அம்மாவிடம் கொடுத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்

Advertisement