எல் கே ஜி-யா இல்லை பி.எச் டி-யா.! ஆர் ஜே பாலாஜி ‘LKG’ படத்தின் திரை விமர்சனம்.!

0
2079
Lkg
- Advertisement -

தமிழ் சினிமாவில் அரசியல் வாதிகளையும் அரசியலையும் கலாய்த்து பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- எல் கே ஜி (LKG)
இயக்குனர்:- லியோன் ஜேம்ஸ்
நடிகர்கள் : – ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஆர் கே ரித்தீஷ், மயில் சாமி மற்றும்  பலர்.
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இசையமைப்பளார் :- லியோன் ஜேம்ஸ்
வெளியான தேதி:- 22-02-2018

- Advertisement -

கதைக்களம் :

லால் குடி கருப்பையா காந்தி (LKG), லால்குடியில் இருக்கும் பிரபல அரசியல்தியான நாஞ்சில் சம்பத்தின் மகன் தான் நம்ம ஹீரோ LKG. ஆரம்பத்திலேயே வாரிசு அரசியலில் ஆரம்பிக்கறது படத்தின் கதை. வார்டு கவுன்சிலரான லால்குடி காந்தி, உள்ளூர் காண்ட்ராக்டரை மிரட்டுவது, புகழ் பெற்ற பள்ளி பிரின்சிபலை மிரட்டி சீட் வாங்குவது என்று சிறிய லெவலில் கௌன்சிலரின் அளப்பறைகளில் போய்க்கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், கௌன்சிலராக மட்டுமில்லாமல் எம் எல்ஏ, எம் பி பின்னர் சி எம் என்று வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் காந்தி. பின்னர் இவ்வருடம் கார்பொரேட் நிறுவனத்தில் இருக்கும் ப்ரியா ஆனந்தும் இணைகிறார். பின்னர் அரசியலில் இருக்கும் கார்பொரேட் நிறுவனங்களின் தலையீட்டால் காந்திக்கு என்ன ஆகிறது. சமூக உடன்களும், மீடியாவும் நினைத்தால் எப்படி ஒரு மனிதனை பிரபலமாகவும், இல்லை கெட்டவனாகவும் காண்பிக்க முடியும் என்பதை சொல்கிறது இந்த படம். இறுதியில் காந்தி என்னவாணர் அவர் இந்த சமுதாயத்திற்கு சொல்ல வந்த கருத்து என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ப்ளஸ் :

வெறும் அரசியலை கலாய்ப்பது மட்டும் காண்பித்து கைத்தட்டலை வாங்காமல் தற்போதுள்ள இளைஞ்சர்கள் அரசியலுக்கு வர வேண்டும், சுயேட்ச்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தினை ஆழமாக சொல்லியுள்ளது ஆர் ஜே பாலாஜியின் பேனா.

படத்தின் முதல் 10 நிமிடம் தனியாக கலாய்க்கும் பாலாஜி பின்னர் ப்ரியா ஆனந்துடன் சேர்ந்த பின்னர் படம் சூடு பிடிக்கிறது. இது வெறும் scoof படம்தானே என்று மெத்தனமாக இல்லாமல் கதை மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியுள்ளது கொஞ்சம் பாராட்டலாம். பிரியா ஆனந்தின் நடிப்பு இந்த படத்தில் கை கொடுத்திருக்கிறது.

மைன்ஸ் :

இது வெறும் கமெர்சியல் படம் தான் என்பதால் பெரிதாக படத்தை ஆராயக்கூடாது. இருப்பினும் ஒரு முழுமையான கமர்சியல் படம் பார்த்த திருப்தி இந்த படம் அளிக்கவில்லை என்பது தான் உண்மை. நாஞ்சில் சம்பத், ஆர் கே ரித்தீஷ் போன்றவர்கள் பெரிதாக பயன்படுத்தபடவில்லை. ஆங்காங்கே ஒரு சில காட்சியில் மொக்கை காமெடி தென்படுகிறது. படத்தின் இசை ஒரு மிகப்பெரிய மைனஸ்.

தமிழில் தற்போதைய அரசியலை கேலி செய்யும் விதமாக பல்வேறு படங்கள் வந்துள்ளது. தமிழ் படம், தமிழ் படம் 2 , ஜோக்கர் போன்ற படங்களை கூறலாம். இதில் ஜோக்கர் ஒரு தனி ரகம் அதனை விட்டுவிடலாம். தமிழ் படத்தோடு இதனை ஒப்பிட்டால் அந்த படத்திற்கு நிகராக இதில் கலாய் நிறைந்துள்ளது. மேலும், இதில் ஒரு சமூக நிலத்தையும் புகுத்தியுள்ளது படத்திற்கு மேலும் ஒரு ப்ளஸ். மொத்தத்தில் இந்த படம் தற்போதுள்ள அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இல்லாமல் அதற்கான ஒரு தீர்வையும் சொல்லியுள்ளது. ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகம் தான். இப்படத்திற்கு நமது behindtalkies-ன் மதிப்பு 6/10.

Advertisement