சாதி, அரசியல் படங்களை ஏன் இயக்குவது இல்லை ? – லோகேஷ் கனகராஜ் கொடுத்த நச் பதில்.

0
2124
- Advertisement -

ஜாதி- அரசியல் படங்களை எடுக்காதது குறித்த சர்ச்சைக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
lokesh

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம்:

இதற்கான பாஸ்கள், விழா நடைபெறுவதற்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. ஆனால், மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக `ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ட்ரெய்லரில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கெட்ட வார்த்தை விஜய் பேசி நடித்திருக்கிறார்.

லியோ ட்ரைலர்:

இதனால் பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனால் லியோ ட்ரைலர் குறித்து சிலர் நெகட்டிவான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். இதனை அடுத்து இந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், லியோ படம் வெளியீடு தொடர்பாக தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தது. அதில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும். இறுதிக்காட்சி இரவு 1:30 மணிக்கு முடிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள்.

-விளம்பரம்-

லோகேஷ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் ஜாதி- அரசியல் படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்டியில் அவர், நான் ஒரு கமர்சியல் இயக்குனர். நான் எடுக்கும் கமர்சியல் படங்களில் முடிந்த அளவு அதிகமாக மசாலா இல்லாமல் உண்மை மற்றும் நம்பகத்தன்மையை சேர்க்க முயற்சிக்கிறேன். நான் எடுக்கும் படங்களில் அரசியல், ஜாதி பிரச்சனைகளை பேசாமல் இருப்பதற்கு காரணம் எனக்கு அதில் போதிய அளவு அறிவில்லை.

சாதி-அரசியல் படம் குறித்து சொன்னது:

நான் எப்போதும் நம்புவது ஒரே விஷயம் தான் பாதி அறிவு என்பது எப்போதுமே ஆபத்துதான். அப்படி இருக்கும்போது எனக்கு தெரியாத ஒன்றைப் பற்றி எப்படி எடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல் எனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒத்துக் கொள்வது சரியான ஒன்று. ஒரு இயக்குனராக எனக்கு அரசியலில் போதிய அறிவில்லை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை தான். ஆனால், அதுதான் உண்மை காரணம், என்னுடைய தேடல் வேறு எங்கேயோ இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement