பிரபல பின்னனி பாடகர் விஜய் யேசுதாஸ் சென்ற கார் விபத்து – அவரின் தற்போதைய நிலை.

0
2519
- Advertisement -

பின்னணிப் பாடகர் யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸ் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாசும் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2000 ஆண்டு வித்யாசாகர் இசையமைப்பில் பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர் மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி என்று பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள விஜய் யேசுதாஸ் பல்வேறு விருதுகளையும் குவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பாடகராக மட்டுமல்லாமல் இவர், மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு அவன் என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வில்லனாகவும் நடித்து இருந்தார். அதன் பின்னர் படை வீரன் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு 12.30 மணி அளவில் விஜய் யேசுதாஸ் சென்றுகொண்டிருந்த கார் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

- Advertisement -

நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து தனது நண்பர்களுடன் காரில் வந்திருக்கிறார் விஜய் யேசுதாஸ். அதே நேரத்தில் திருக்காட்டுச்சேரியிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு கார் திருவாரூர் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் சட்டென நுழைய இருவரது கார்களும் மோதின. இரண்டு கார்களும் நேருக்கு நேராக மோதியதில் இரண்டு கார்களின் முன் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

വിജയ് യേശുദാസ് സഞ്ചരിച്ച കാർ അപകടത്തിൽ പെട്ടു | vijay yesudas car accident  alappuzha

விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்தில் சேதமடைந்த இரண்டு கார்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த விபத்தில் விஜய் ஏசுதாஸ் இருக்கும் அவரது நண்பருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை. அதன்பின்னர் விஜய் யேசுதாஸ் அவரது நண்பர்களும் மற்றொரு காரில் கொச்சிக்கு சென்றுள்ளார்கள்

-விளம்பரம்-
Advertisement