நெல்சனை இதனால் தான் ட்ரோல் பண்றங்களான்னு தெரியல -பீஸ்ட் Vs விக்ரம் குறித்த கேலிகளுக்கு லோகேஷ் சொன்ன பதில்.

0
694
lokesh
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி இருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின் ரிலீசாகி இருக்கும் கமலின் விக்ரம் படத்தின் முன்னோட்டம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : கோலாகலமாக முடிந்த கண்மணி-நவீன் திருமணம், வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

நெல்சனை கலாய்க்கும் நெட்டிசன்கள் :

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-52-1024x783.jpg

Fan Boy சம்பவத்தை கோட்டை விட்ட நெல்சன் :

விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-54-1024x945.jpg

நெல்சனை கலாய்க்க காரணம் :

எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறார் லோகேஷ். இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். அதே போல பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பாக நெல்சன் அளித்த பேட்டிகளில் அவர் பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இந்த கேலிகளுக்கு மற்றுமொரு முக்கிய காரணம். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் நெல்சனை கலாய்ப்பது குறித்து கேட்கப்பட்டது.

லோகேஷ் கொடுத்த விளக்கம் :

இதற்க்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ‘எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, நெல்சன் எனக்கு நெருங்கிய நண்பர். எல்லோருக்கும் ஒரு இயல்பு உள்ளது, அதேபோல் எப்போதும் ஜாலியாக பேசும் இயல்புடையவர் நெல்சன். அவர் அப்படி இயல்பாக பேசியதை தவறாக எடுத்துக்கொண்டு ட்ரோல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை.வெற்றியடையும் போது கொண்டாடிவிட்டு, தோல்வியடையும் போது விமர்சனம் செய்துவது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அளவுக்கு மீறின விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது’ என்று கூறியுள்ளார்.

Advertisement