தடையை மீறி லியோவில் சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்தது இதனால் தான் – நேர்மையாக சொன்ன லோகேஷ்

0
2807
- Advertisement -

விஜய் நடிப்பில் அக்டோபர் 19 தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தில் சின்மயிக்கு தடையை மீறி லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு அளித்துள்ளார். அது குறித்து தற்போது விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.

Leo Trailer

இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. ‘பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பலர் நினைப்பது போல இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்றும் கூறி இருந்தது.

-விளம்பரம்-

சின்மயி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்:

என்னுடைய திரைப்படங்களில் நிறைய காதல் ரொமேன்ஸ் காட்சிகள் இருக்காது ஏனென்றால் எனக்கு அது எழுதவும் வராது. ஆனால் லியோ திரைப்படத்தில் நான் கொஞ்சம் நன்றாகவே ரொமான்ஸ் காட்சிகளை எழுதி உள்ளேன் என்று எனக்கு தோன்றுகிறது. அதற்கு உயிர் அளிக்கும் வகையில் விஜய், திரிஷா நடித்த ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றது. அந்தக் காட்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக சின்மயியை வைத்து டப்பிங் செய்ய முடிவு செய்தோம்.

மேலும் கூறியவர் அவங்களுக்கு தடை விதிக்கப்பட்டது எல்லாம் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு என்னுடைய வேலை முடிய வேண்டும் அதற்காக அவர்களை அழைத்துப் பேச வைத்தேன். அவர் தன்னுடைய குரலால் த்ரிஷாவின் கேரக்டர் உயிர் கொடுத்துவிட்டார். எல்லா மொழிகளிலும் த்ரிஷாவிற்கு சின்மயி டப்பிங் செய்து உள்ளார் என்றும் அவர் கூறினார். தடையை மீறி தனக்கு வாய்ப்பளித்ததற்கு லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தளத்தில் சின்மயி ஒரு பதிவும் ஒன்றை போட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement