என்னது லோகேஷ் கனகராஜுக்கு திருமணம் ஆகி இத்தனை பசங்க இருக்காங்களா – அதுவும் லவ் மேரேஜாம்.

0
2743
Lokesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூலிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரை பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். அந்த குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜின் “அவியல்” குடும்ப தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபு லோகேஷ் கனகராஜிடம் ஏதாவது கதை இருந்தால் கொண்டு வாருங்கள் எனக் கூற “மாநகரம்” படத்திற்கு திரைக்கதை எழுதி கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தான் தன்னுடைய லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார்.

- Advertisement -

லியோ படம் :

இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், புரியுமா ஆனந்த், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. அதோடு இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குடும்பம் :

இப்படி லோகேஷ் கனகராஜ் பற்றி இவ்வளவு தெரிந்தும் பலருக்கும் இவரது தனிப்பட்ட வாழ்கை தெரியாமல் தான் இருக்கிறது. உண்மையில் லோகேஷ் கனகராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் தான் நீண்டநாள் காதலித்த வந்த ஐஸ்வர்யா லோகேஷை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அத்விகா லோகேஷ் மற்றும் ஆருத்ரா லோகேஷ் என இரண்டு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

லோகேஷ் கனகராஜ் மனைவி பற்றி :

இந்நிலையில் சமீபாத்தில் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்த பேட்டியில் தன்னுடைய குடும்ப வாழ்க்கையை பற்றி கூறியிருந்தார். அவர் கூறுகையில் “நான் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டேன். அதன் பிறகுதான் சினிமாவுக்கும் வந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வுதான் நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணம். நான் வேலையை விடும்போது, மனைவியும் வேலையில் இல்லை. கல்யாணமான தொடக்கத்தில் மாதம் 70 ஆயிரம் என இருவரும் சம்பாதித்தோம், குழந்தை பிறந்த பின் நான் மட்டும் வேலைக்குச் சென்றேன். திரைப்பட வாய்ப்புக் கிடைத்த பின் நான் வேலையை விட்டுவிட்டேன். மாத வருவாய் ஒன்றும் இல்லை.

என்னுடைய மனைவிதான் காரணம் :

ஒரு முடிவு எடுத்தோம், “எனக்கு இரண்டாவது படம் கிடைக்கும் வரை நீ வேலைக்குப் போ. அது வரைக்கும் எனக்குப் பெரிய வருவாய் இருக்காது” என்றேன். குழந்தைக்கு ஏழு மாதம் இருக்கும் போதே மனைவி வேறொரு. வங்கியில் பணியில் சேர்ந்தார். நான் சினிமாவில் இருந்தேன். இரண்டரை வருடம் அவர் வேலைக்குச் சென்றார். மாநகரம் முடித்த பின்பு அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த படமும் கையெழுத்திட்டேன். அடுத்த ஒரு வாரத்திலேயே அவரை வேலையை விடச் செய்தேன். இந்தப் புரிதல்தான் என்னைச் சினிமாவில் நிலை நிறுத்தியது.

Advertisement