லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்ஸில் தான் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஷாந்தனு கேட்ட கேள்விக்கு படு பங்கமாக பதில் அளித்துள்ளார் லோகேஷ் கானகராஜ். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல்.
இதையும் பாருங்க : என்னது பல கௌண்டமணி செந்தில் காமெடிக்களில் வந்த இவர் செந்திலுக்கு இப்படி ஒரு உறவினராம். அவரே சொன்ன தகவல்.
பரிசுகளை அள்ளிக்கொடுத்த கமல் :
அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கும் சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல். விக்ரம் படம் ஒரு மல்டி யுனிவர்ஸ் படம் போல தான் அமைந்து இருக்கிறது. கமல் நடிப்பில் வெளியான ஒரிஜினல் விக்ரம் படம் துவங்கி கைதி வரை பல படங்களின் தொடர்ச்சியாகவே தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ்.
கேள்விகளுக்கு பதில் அளித்த லோகேஷ் :
விக்ரம் படத்தில் ஏற்கனவே கைதி படத்தில் வந்த கார்த்தியின் குரல் மட்டும் கேட்கப்பட்டது. விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ்சிலும் விக்ரம் 2 தொடர்ச்சிக்க்கான அடித்தளத்துடன் தான் முடித்தனர். எனவே, விக்ரம் 2 உருவானால் அதில் கார்த்தயும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் லோகேஷ்.
சாந்தனுவை கலாய்த்த லோகேஷ் :
இதில் ரசிகர்கள் மட்டுமல்லாது பல நடிகர் நடிகைகளும் கேள்விகளை கேட்டு இருந்தனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர் படத்தில் நடித்து இருந்த ஷாந்தனு ‘உங்கள் யூனிவர்சில் மீண்டும் பார்கவ் வர எதாவது வாய்ப்பு இருக்கிறதா ? நேர்மையான பதில் மட்டும் சொல்லுங்க என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ‘சாரி மச்சி, பார்கவ் செத்துட்டான்’ என்று பங்கமாக பதில் அளித்துள்ளார்.
கேலிகள் குறித்து சாந்தனு :
சாந்தனு, மாஸ்டர் படத்தில் நடித்த பார்கவ் கதாபாத்திரத்தை அந்த படம் வெளியான போதே பலரும் வச்சி செய்து இருந்தனர். அந்த படத்தில் நடித்த பூனை கூட உங்களை விட அதிகம் நடித்துவிட்டது என்றெல்லாம் கூட பல மீம்களை போட்டு கலாய்த்தனர். அதற்கு பதிலடி கொடுத்த சாந்தனு ‘அடுத்தவரை கேலி செய்து அதன் மூலம் ஏற்படும் சிறிய மகிழ்ச்சி. இதுபோன்ற கேலிகள் சலித்துவிட்டது. ஆனால், என் மீது கல் எரிந்ததர்க்கும், தெரிந்தும் தெரியாமல் எனக்கு உத்வேகம் கொடுத்ததர்க்கும் நன்றி. இது ஒரு நாள் நடக்கும் அப்போது என்னுடைய பதில் இருக்கும். லவ் – பார்கவ்’ என்று நம்பிக்கையோடு பதிவிட்டு இருந்தார்