என்னது பல கௌண்டமணி செந்தில் காமெடிக்களில் வந்த இவர் செந்திலுக்கு இப்படி ஒரு உறவினராம். அவரே சொன்ன தகவல்.

0
811
jeyamani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் ஜெயமணி. ஆரம்பத்தில் இவர் அரசு வேலையில் தான் பணியாற்றியிருந்தார். பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சாது என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் இவர் வடிவேலும் உடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இருவரின் நடிப்பில் வரும் காமெடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அதோடு இவரை சினிமா திரையில் தூக்கி விட்டது லக்கிமேன் படத்தில் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-87.png

பின் இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல பிரபலங்கள் உடன் இணைந்து காமெடி நடிகராக நடித்திருக்கிறார். மேலும், இவர் 23 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்திருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் ஜெயமணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். பேட்டியில் ஜெயமணி கூறியிருப்பது,

இதையும் பாருங்க : Invitation இல்லாமல் No Entry, இந்த உடையில் தான் வர வேண்டும், இதற்கு அனுமதியில்லை, நயன் -விக்கி திருமணத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

- Advertisement -

சினிமாவில் நுழைந்த அனுபவம்:

நான் படித்து முடித்துவிட்டு அரசு வேலையில் தான் வேலை பார்த்து இருந்தேன். ஆரம்பத்தில் எனக்கு சினிமா மீது எந்த ஒரு ஈடுபாடும் கிடையாது. ஆனால், என்னுடைய அண்ணன் ஒருவர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு நாடகத்தில் நடிப்பதை விட நாடகம் பார்ப்பது ரொம்ப பிடிக்கும். அதனால் விடிய விடிய உட்கார்ந்து நாடகம் பார்ப்பேன். பின் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் சென்னையில் வேலை மாற்றம் செய்து இருந்தார்கள். அதனால் நாங்கள் இருவரும் வேலைக்காக தான் சென்னை வந்தோம். ஆனால், பலரும் நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று எல்லாம் சொன்னார்கள்.

This image has an empty alt attribute; its file name is image-88.png

முதன் முதலில் நடித்த படம் :

ஆனால், அது உண்மையில்லை. நாங்கள் 1980இல் வேலைக்காக தான் சென்னை வந்தோம். பின் வேலையை பார்த்து கொண்டே சில வருடங்கள் போனது. பிறகு எனக்கு ஒரு காமெடி நடிகரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் என்னை முதன் முதலில் பார்த்து நீ பார்ப்பதற்கு செந்தில் மாதிரியே இருக்கிறாய், படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார். நானும் சரி நடிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் படத்தில் நடிக்க தொடங்கினேன். நான் முதன் முதலாக அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சாது என்ற படத்தில் தான் நடித்தேன்.

-விளம்பரம்-

சினிமாவில் பட்ட கஷ்டங்களை கூறிய ஜெயமணி:

நான் இதுவரைக்கும் 250 படங்களுக்கு மேல் பண்ணியிருக்கிறேன். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். அது மட்டுமில்லாமல் சினிமாவில் பல கஷ்டங்களையும் சந்தித்து இருக்கிறேன். இப்போது மாறி எல்லாம் அப்போ கிடையாது. உணவு சாப்பாடு சாப்பிடும் விஷயத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சாப்பாடு, கேமரா மேனுக்கு ஒரு சாப்பாடு, டெக்னிசியனுக்கு ஒரு சாப்பாடு கொடுப்பார்கள். நான் சினிமா கட்டத்தில் நுழைந்து ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. நான் கையில் தட்டை வைத்து நீக்கும் போது கையில் இருந்த தட்டை பிடுங்கி அவங்களோட போய் சாப்பிடு என்று சொல்வார்கள்.என்னடா ஒரு அரசாங்க அதிகாரியாகப் சம்பளம் வாங்கியிருக்கிறோம்.

சினிமாவில் நடிகர்கள் படும் கஷ்டம்:

இப்படி நமக்கு கஷ்டமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இருந்தாலும் நம்முடைய படம் தியேட்டரில் வரும்போது அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கும். அதற்காக தான் பல கஷ்டங்கள் எல்லாம் கடந்து வந்தேன். இது நான் மட்டுமில்ல சினிமா துறையில் உள்ள ஒவ்வொரு நடிகரும் இந்த மாதிரி பல கஷ்டங்களை அனுபவித்து தான் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய் என அனைத்து நடிகர்களுமே பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் சமாளித்தவர்கள். சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு நடிகனும் அவமானம் படாமல் முன்னுக்கு வந்ததே இல்லை என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement