எல்லா படத்திலும் இருப்பன்னு ரஜினி மாதிரி அஜித் சொன்னார். ஆனால், எந்த படத்திலும் இல்ல. புலம்பிய காமெடி நடிகர்.

0
60223
ajith-rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும்நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த வலிமை படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வெற்றிகரமாக முடிவு பெற்றது.

-விளம்பரம்-
Image result for comedy actor swaminathan with rajini"

- Advertisement -

இதனை தொடர்ந்து வெற்றிகரமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற உள்ளது. இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகியும், பிற நடிகர்கள் குறித்தும் எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர்.

இதையும் பாருங்க : எல்லா படத்திலும் இருப்பன்னு ரஜினி மாதிரி அஜித் சொன்னார். ஆனால், எந்த படத்திலும் இல்ல. புலம்பிய காமெடி நடிகர்.

இந்நிலையில் தல அஜித் குறித்து காமெடி நடிகர் சுவாமிநாதன் அவர்கள் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சுவாமிநாதன். இவர் சினிமா உலகிற்கு வந்து முப்பது வருடங்கள் ஆகிறது. இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இன்னும் வரை கூட இவர் ஆர்வத்தோடு படங்களில் நடித்து வருகிறார். இவர் தல அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் நடித்து உள்ளார். அதற்கு பிறகு வேதாளம் என்ற படத்தில் தான் இணைந்து நடித்தார். அதற்கு பிறகு இவர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

வீடியோவில் 24 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

சமீபத்தில் பேட்டியில் அவர் கூறியது, ரஜினி மாதிரி அஜித் அவர்கள் ஆரம்பத்தில் என்னுடைய எல்லா படங்களிலும் நீங்கள் இருப்பீர்கள் என்று சொன்னார்கள். அதன் பிறகு அவருடன் நான் நடிக்கவே இல்லை. ரஜினியுடனாவது 4,5 படங்களிலாவது நடித்தேன். என்ற கூறியுள்ளார். ஆனால், அஜித்தின் வேதாளம் நடிகர் சுவாமிநாதன் அவர்கள் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டி தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement