லொள்ளு சபா நாயகி ஸ்வேதாவை நினைவிருகிறதா? சேஷு குறித்து அவர் சொன்ன அறிந்திராத பக்கம்.

0
610
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சி. இதில் சந்தானம், ஜீவா, லொள்ளுசபா மனோகர், பாலாஜி, சுவாமிநாதன், ஜாங்கிரி மதுமிதா, மனோகர் உட்பட பல முன்னணி நடிகர்கள் போட்டியாளர்களாக கலந்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் பல பேர் தற்போது சினிமாவுலகில் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இப்போதும் இந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் ஸ்வேதா. இவருடைய உடல் மொழியும், டைமிங் காமெடியும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுவேதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், லொள்ளு சபா டீமே ரொம்ப ஜாலியான டீம்.

- Advertisement -

லொள்ளு சபா ஸ்வேதா பேட்டி:

என்னுடைய நண்பர்கள் யாராவது லொள்ளு சபா செட்டுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள் என்றால் நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன். காரணம், அங்கு வந்தால் நீங்க எபிசோடு பார்க்க மாட்டீர்கள், வெறுத்து விடுவீர்கள் என்று சொல்லுவேன். ஏன்னா, செட்டில் நாங்கள் எல்லோருமே ரொம்ப சீரியஸாக தான் நடிப்போம். சோபனா இருந்தபோது நானும் அவளும் சிரித்துக் கொண்டே இருப்போம். ரெண்டு பேரும் சிரிக்க ஆரம்பித்து விட்டாலே நிறுத்தவே மாட்டோம். அதனாலேயே எங்க ரெண்டு பேரையும் பிரித்து வைத்து விட்டார்கள்.

லொள்ளு சபா சேசு குறித்து சொன்னது:

அதோடு டைரக்டர் இடம் திட்டு வாங்காத ஆள் என்றால் அது நான்தான். மேலும், எனக்கு சேசு அண்ணாவை ரொம்ப பிடிக்கும். லொள்ளு சபாவுக்கு முன்னாடியே அவரை எனக்கு தெரியும். அவர் ரொம்ப நகைச்சுவையான நபர். அதே அளவுக்கு கருணை உள்ளமும் கொண்டவர். யாருக்காவது உதவி தேவை என்றால் எப்படியாவது யாரிடம் மூலமாவதும் கேட்டு வாங்கி வந்து உதவி செய்துவிடுவார். சமீபத்தில் எங்கள் ரீயூனியலில் சந்தித்தபோது அவரிடம் பேசினேன். ஆனால், அன்று இரவு தான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று போன் வந்தது.

-விளம்பரம்-

சேசு உடல்நிலை:

அதைக் கேட்டு நான் ரொம்பவே பதறிப் போய் விட்டேன். உடனே மருத்துவமனைக்கு சென்று சேசு அண்ணாவை பார்த்தேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நாம் சொல்வதைக் கேட்டு பதில் சொல்கிறார். சீக்கிரமாகவே அவர் வந்து உங்களை எல்லாம் மகிழ்விக்கணும். கண்டிப்பாக அவர் வருவார் வரணும் என்று நான் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர் இப்போது இல்லை பல வருடங்களாகவே உதவி செய்து கொண்டிருக்கிறார். இன்னைக்கு தான் சோசியல் மீடியா மூலம் அதெல்லாம் வெளியில் தெரிகிறது.

சேசு செய்த உதவிகள்:

கல்யாணம் பண்ணி வைப்பதெல்லாம் பெரிய விஷயம். பல குடும்பங்கள் சேசு அண்ணாவால் தான் நன்றாக இருக்கிறார்கள். படிப்பு, கல்யாணம், மருத்துவ உதவி என்று எல்லாத்துக்குமே அவர் உதவி இருக்கிறார். இப்படி பல பேருடைய வாழ்க்கைக்கு வழி துணையாக இருந்த சேசு அண்ணா கண்டிப்பாக திரும்பி வந்து விடுவார் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் லொள்ளு சபா சேஷும் ஒருவர். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதற்குப் பின் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவர் உடல்நல குறைவால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

Advertisement