‘இதெல்லாம் ஒரு பாட்டா’ – சமந்தாவின் ஓ சொல்றியா பாடலை வருந்தெடுத்த எல் ஆர் ஈஸ்வரி.

0
488
LREswari
- Advertisement -

‘ஓ சொல்றியா மாமா’ பாடலை குறித்து பிரபல பின்னணி பாடகி எல் ஆர் ஈஸ்வரி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகியாக திகழ்ந்தவர் எல் ஆர் ஈஸ்வரி. இவர் 1958 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். மேலும், இவர் சினிமா பாடல்கள் மட்டுமில்லாமல் பல பக்தி பாடல்களை பாடி இருக்கிறார். இடையில் சில காலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆனாலும், பல பக்தி பாடல்களை இவர் பாடி இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்திருந்த ஒஸ்தி திரைப்படத்தில் கலசலா கலசலா என்ற பாடலின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இடத்தை பிடித்தார் ஈஸ்வரி.

- Advertisement -

இப்படி எல் ஆர் ஈஸ்வரியை தெரியாதவர்கள் யாருமே இருக்கு மாட்டார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய குரலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். மேலும், கவர்ச்சி குரல் குயிலாக அன்று முதல் இன்று வரை திரை உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார் எல் ஆர் ஈஸ்வரி. இந்த நிலையில் சமீபத்தில் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும், பாடல்கள் குறித்தும் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

எல்.ஆர்.ஈஸ்வரி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் நான் கோரஸ் பாடல்கள் தான் பாடிக்கொண்டிருந்தேன். ஸ்வர்ண சுந்தரி படத்தில் பிலுவகுரா என்ற பாடலுக்கு தான் கோரஸ் பாடச் சென்றேன். அப்போது என்னுடைய குரல் சரியாக இல்லை என்று என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். அப்போது நான் பயங்கரமாக அழுந்தேன்.பின் விடாமுயற்சியினால் சினிமாவில் பாட ஆரம்பித்தேன்.

-விளம்பரம்-

புஸ்பா பட பாடல் குறித்து சொன்னது:

நான் பெரிய பாடகி ஆன பிறகு எந்த ரெக்கார்டிஸ்ட் என்னை வெளியேற்றினார்களோ அதே ரெக்கார்டிஸ்ட் எனது பாடலை பதிவு செய்தார். அது மட்டுமில்லாமல் இப்போது வரும் பாடல்கள் எல்லாம் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. சமீபத்தில் புஷ்பா படத்தில் வெளிவந்த ஓ சொல்றியா மாமா என்ற பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது.

சினிமா பயணம் குறித்து சொன்னது:

மியூசிக் டைரக்டர் இதையெல்லாம் கவனிக்க வேண்டும். பாடகர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் சொல்லியபடி பாடி விடுவார்கள். இதே அந்த பாடல் என்னிடம் வந்திருந்தால் அந்த கலரே வேறு. நாங்கள் எல்லாம் ரொம்ப சின்சியராக எங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வந்தோம். அதனால் தான் அப்போது நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும் மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு படம் 100 நாட்கள் 250 நாட்கள் என்று ஓடும். ஆனால், இப்போது 10 நாட்கள் ஓடினாலே பெரிதாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement