youtube-ல் வீடியோ வெளியிட்டதற்கு சவுக்கு சங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தொடர்ந்து இருக்கும் வழக்கு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபராக இருப்பவர் சவுக்கு சங்கர். முதலில் இவர் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி இருந்தார். இவர் அதிகாரிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்த சர்ச்சையில் பணியில் இருந்து நீக்கி விட்டார்கள்.
அதற்குப்பின் இவர் சவுக்கு என்ற தனியார் யூடியூப் சேனலில் அரசியல் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அரசியல், சினிமா பிரபலங்கள் குறித்து பல திடுக்கிடும் தகவலை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது பேசும் பொருளாகி இருக்கிறது. அதாவது, சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸ் செய்து வருகிறது.
போதை பொருள் கடத்தல்:
இதனால் கடந்த சில மாதங்களாக டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீஸ் அதிரடியாக கைது செய்து இருந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி இருந்தது. இந்த போதைப் பொருள் கடத்தலின் தலைவராக தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ஜாஃபர் இருக்கிறார் என்று தெரிய வந்து இருக்கிறது. அதோடு இவர் இதுவரை 2000 கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்திருக்கிறார்.
சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ:
இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் அவர்கள் லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த லைகா நிறுவனம் கோடிக்கணக்கில் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த மனுவில், லைக்கா நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கர் உடைய வீடியோ இருக்கிறது.
மனுவில் கூறி இருப்பது:
அவரின் youtube பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் கிடைத்த தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். அதோட அந்த வீடியோவையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்கும் வீடியோக்களை வெளியிட்டதற்கும் சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நீதிபதி உத்தரவு:
மேலும், இந்த வீடியோ மூலம் வந்த வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்குவது தொடர்பாக சவுக்கு சங்கர் முறையாக பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்து வைக்கப்படுகிறது என்று உத்தரவு போட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.