தயவு செஞ்சி இப்படியெல்லாம் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.! ரசிகர்களால் கடுப்பான விஜய் 63 பிரபலம்.!

0
1214
Vijay-63
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களுக்கு பிறகு இந்த படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறது அட்லீ-விஜய் கூட்டணி. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் அணைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதுகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடலையும், சர்கார் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களையும் எழுதினார்.

- Advertisement -

ஆளப்போறான் தமிழன் பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்ததால் இவரது பெயரும் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இதனால் தற்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் உள்ளனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்ட உள்ளார்.

இதற்காக இப்போதிருந்தே இவருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதிலும் விஜய் 63 படத்தின் அப்டேட்டை தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் தான் இவரை அதிகம் பின்தொடர்கின்றனர்.இந்த நிலையில்
விஜய் ரசிகர்கள் விவேக்கின் பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் #50DaysToGoForLyricistVivekAnnaBday என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்துள்ளனர்.

-விளம்பரம்-

தன்னை அடிக்கடி டேக் செய்வதால் ரசிகர்களின் அன்புத் தொல்லையால் சற்று கடுப்பான விவேக், இதெல்லாம் ஒரு வேலையா? நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என விஜய் ரசிகர்களை எச்சரித்து அறிவுரை கூறியுள்ளார்.

Advertisement