மலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை தாரை வார்த்து கொடுத்துள்ளது. நயன்தாரா துவங்கி சாய் பல்லவி வரை அனைவரும் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த படத்தின் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார் நடிகை மீரா ஜாஸ்மின், கேரளாவின் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்த இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.
நடிகை மீரா ஜாஸ்மின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்த வந்தது. அதனை பார்க்க மீராவும் அவரது நண்பர்களும் சென்றிருந்தனர். அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து, தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என கேட்டுள்ளார். பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜாஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அதிர்ச்சியாக இருந்தது. சரி என்று சொல்லி 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார்.
இதையும் பாருங்க : உனக்கு வேல போய்டுச்சின்னா நாங்க என்ன பண்ண முடியும் – அப்போலோ பெண் ஊழியரிடம் பேசியுள்ள ஷாலினி. வெளியான ஆடியோ இதோ.
அதன் பின்னர் சினிமா துறையில் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாம் தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். 2003ல் வந்த ‘பாடம் ஒன்னு : ஒரு விழுப்பம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் மீரா.
அதன்பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா. பின்னர் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த மீரா ஜாஸ்மின் உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியுள்ளார் மீரா ஜாஸ்மின். இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.