என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை – சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் விளக்கம்

0
627
- Advertisement -

என்ஜாயி என்சாமி பாடல் விவகாரம் தொடர்பாக சந்தோஷ் நாராயணன் அளித்த புகாருக்கு மாஜா நிறுவனம் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய பாடல்களில் ஒன்று என்ஜாய் எஞ்சாமி. இவருடன் இந்த பாடலை ராப் பாடகர் அறிவு என்பவரும் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். அதே போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் இந்த பாடல் மிகப்பெரிய பிரபலமானது. அதிலும் குழந்தைகளை இந்த பாடல் மிகவும் கவர்ந்தது .
நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

- Advertisement -

சந்தோஷ் நாராயணன் வீடியோ:

இப்படி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த என்ஜாயி எஞ்சாமி பாடலின் மூலம் ஒரு ரூபாய் கூட வருமானம் கிடைக்கவில்லை என்று சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர், என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு பைசா கூட அந்த பாடலின் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் காரணமாகவே நானே சொந்தமாக ஸ்டுடியோ தொடங்க உள்ளேன்.

என்ஜாயி எஞ்சாமி பாடல் குறித்து சொன்னது:

தனி இசை கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் செயல்படும் தளங்கள் தேவை. எனது யூடியூப் சேனல் வருமானமும் மியூசிக் லேபிளுக்கு செல்கிறது. இதைப் பற்றி பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசை கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மாஜா நிறுவனம் பணம் அளித்து விட்டதாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள், இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் மாஜா நிறுவனம்.

-விளம்பரம்-

மாஜா நிறுவனம் கொடுத்த விளக்கம்:

எங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியான முதல் பாடல் என்ஜாய் எஞ்சாமி. இது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த பாடல் மூலம் அனைவரும் உலக அளவில் பிரபலமானது மட்டுமில்லாமல் தங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சாதனை படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிஷ்டவசமாக இந்த பாடலின் வெற்றிக்கு பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களுடன் எங்களுக்கு சில முரண்பாடான கருத்து இருந்தது. இதனால் சில சர்ச்சைகளும் இருந்திருந்தது.

வருமானம் குறித்து சொன்னது:

எங்களுடைய பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தவறான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இதை நான் கடுமையாக மறுக்கிறோம். அவர்களின் உழைப்புக்கு நாங்கள் மரியாதையும், வருமானத்தையும் நிறுத்தி வைக்கவில்லை. மேலும், கலைஞர்களிடம் போட்ட ஒப்பந்தப்படி அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேர்த்து வைத்த வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதற்கான எந்த பதிலோ, அறிக்கைகளோ எங்களுக்கு கொடுக்கவில்லை. இதனால் பிரச்சனை பெருசு ஆனது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் தொடர்பாக இரண்டு கலைஞர்களுக்கு முன் பணமும் வழங்கப்பட்டது. மேலும், எங்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து சரியான வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement