‘மாநாடு’ – முழு விமர்சனம்

0
979
maanaadu
- Advertisement -

பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளிவந்த மாநாடு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து இருக்கிறார். நண்பனின் காதலை சேர்த்து வைக்க துபாயில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார் கதாநாயகன் சிம்பு. அங்கு திருமண பெண்ணை கடத்தி தன் நண்பன் பிரேம்ஜிக்கு திருமணம் செய்ய முயற்சிக்கிறார். பின் ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் மேல் காரை ஏற்றி விடுகிறார் சிம்பு. அப்போது எதிர்பாராத விதமாக எஸ்.ஜே.சூர்யா, சிம்பு சந்திப்பு நடக்கிறது. பின் தான் போட்டு வைத்த எல்லா திட்டத்தையும் சிம்பு கெடுத்து விட்டான் என்று எஸ் ஜே சூர்யா கோபப்படுகிறார்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா சிம்புவை பழிவாங்க பெரிய திட்டம் தீட்டுகிறார். சிம்புவை வைத்தே முதலமைச்சரை சுட்டுக் கொல்ல திட்டமிடுகிறார். ஆனால், சிம்பு முடியாது என்று சொல்கிறார். அப்போது சிம்புவின் நண்பர்களை கொன்று விடுவேன் என்று எஸ்.ஜே.சூர்யா சிம்புவை மிரட்டுகிறார். அதில் பிரேம்ஜியை, எஸ்.ஜே.சூர்யா சுட்டு கொன்று விடுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் முதலமைச்சரை துப்பாக்கியால் சிம்பு சுடுகிறார். உடனே சிம்பு ஒரு இஸ்லாம் என்பதால் மத கலவரத்தை உண்டாக்குகின்றனர். இதன்பின் சிம்புவை போலீஸ் சுற்றி வளைக்கிறது.

-விளம்பரம்-

அப்போது சிம்புவை போலீஸ் சுட்டுக் கொல்கிறது. ஆனால், சிம்பு சாகவில்லை. இங்கு தான் கதையில் ஒரு மிகப் பெரிய ட்விஸ்ட் . சிம்பு தலையில் துப்பாக்கிக் குண்டுபட்டதும் குறிப்பிட்ட ஒரு நாளுக்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே நாளில் சிம்பு பயணம் செய்கிறார் . இதனை ஒரு கட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளும் சிம்பு என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது? இந்த கலவரத்தை எப்படி நிறுத்துவது? என்பது தான் படத்தின் மீதி கதை. ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சிம்பு. எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படமாக்கியிருக்கிறார்.

அப்துல் கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு. படத்தில் சிம்புவுக்கு இணையாக எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டி இருக்கிறார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார். படத்தில் அரசியல் மூலம் மத கலவரத்தை எந்த அளவிற்கு ஆழமாக பிரச்சனை செய்யலாம் என்பதை இயக்குனர் அழகாக சொல்லியிருக்கிறார். அதேபோல் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார்.

ஒரு நாள் மீண்டும் மீண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நடந்தால் அவருடைய மனநிலை எப்படி இருக்கும்? அவரைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று வித்தியாசமான கதைக்களமான டைம் லூப் என்ற கான்செப்டை கொண்டு உருவாகி உள்ளது மாநாடு. சமீபத்தில் வெளிவந்த ஜாங்கோ திரைப்படமும் டைம் லூப் கான்செப்ட் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதைக்களம் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருப்பதால் சிலபேர் குழப்பத்தில் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், படத்திற்கு பக்கபலமாக யுவனின் இசை அமைந்திருக்கிறது. மாநாடு படம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு ஜாலியான என்டர்டைன்மென்ட் படம் என்று சொல்லலாம். சில காட்சிகள் சலுப்பு தட்டினாலும், பல காட்சிகள் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்திருக்கிறது. திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிளஸ்:

படத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பு அற்புதம்.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.

படத்திற்கு பக்கபலமாக யுவனின் இசையும், ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது.

அரசியல்வாதிகள் எவ்வாறு மத கலவரத்தை கையாளுகிறார்கள் என்று அழகாக சொல்லி இருக்கிறார்.

மைனஸ்:

பல காட்சிகள் உடைய கால அளவு கொஞ்சம் நீண்டு இருப்பதை கொஞ்சம் குறைத்து இருந்தால் மாநாடு சலிப்பு தட்டி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

கதைக்களம் நன்றாக இருந்தாலும் இன்னும் விருப்பம் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இறுதி அலசல்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மொத்தத்தில் மாநாடு– சிம்புவின் பக்கா என்டர்டைன்மென்ட் படம்.

Advertisement