கிண்டல் பண்றவன் ஏண்டா படத்துக்கு வரீங்க – தியேட்டருக்கு வெளியில் ரசிகர்களை திட்டிய கூல் சுரேஷ். வைரல் வீடியோ.

0
1581
coolsuresh
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வரும் சிம்பு சமீப காலமாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக இவரது படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இறுதியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆகவே ரொம்ப நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்திற்க்கான முன் பதிவுகளுக்கான டிக்கெட்டுகள் கூட மலமலவென விற்றுத்தள்ளியது.

இதையும் பாருங்க : ஷூட்டிங் போது பைக் விபத்தில் சிக்கிய யாரடி நீ மோகினி சைத்ரா – அவரின் தற்போதய நிலை.

- Advertisement -

மாநாடு படம் பல தடைகள் கடந்து நாளை வெளியாக இருப்பதை எண்ணி கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்று மாநாடு படம் வெளியாவது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துஇருந்தார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், மீண்டும் கொஞ்ச நேரத்தில் ‘மாநாடு’ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

இருப்பினும் இன்று பல்வேரு திரையரங்குகளில் ரசிகர் காட்சிகள் திட்டமிட்டபடி ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் ரசிகர் ஷோ பார்க்க சென்ற நடிகர் கூல் சுரேஷ், படம் வெளியாகவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதார். மேலும், அங்கே கூடி இருந்த ரசிகர்கள் சிலர் படம் வெளியாவததை கேலி செய்ததாக அவர்களை ஒருமையில் திட்டி தீர்த்தார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement