தீபாவளி அன்று நடந்த சோகம். மானாட மயிலாட மனோ காலமானார்.

0
31939
mano
- Advertisement -

திருச்சியில் 2 வயது குழந்தை சுஜித் இன்று காலமாகியுள்ள சம்பவம் தமிழகத்தைய மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிமிக்ரி கலைஞரும் நடிகருமான மனோ கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் மற்றுமொரு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கலைஞர் தொலைக்காட்சியில் பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மனோ பார்ப்பதற்கு அச்சு அசலாக பிரபுதேவா போலவே இருக்கும் மனோ பிரபுதேவா இதே போலவே நடனமாடியும் அவரைப் போலவே மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

-விளம்பரம்-
 manada mayilada mano

மானாட மயிலாட சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மத்தியில் மனோ பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். எப்போதும் ஜாலியான பேர்வழியான மனோவை உடன் ஆடிய அனைத்து போட்டியாளர்களுக்கும் மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் மனோவை அறிமுகம் செய்தது காதல் படத்தில் நடித்த காதல் சுகுமார் தான். மானாட மயிலாட நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மனோ மற்றும் காதல் சுகுமார் இணைந்து தான் நடனமாடினார்கள். அதன் பின்னர் மனோ வேறு ஒரு பெண் ஜோடியுடன் இணைந்து நடனமாட தொடங்கினர். மானாட மயிலாட சீசன் 4 நிகழ்ச்சியில் மனோ தான் ஒரு சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வந்தார். அடிக்கடி தனது மிமிக்கிரி மூலமும் நகைச்சுவையான நடனத்தின் மூலம் போட்டியாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்தார் மனோ. மேலும், அந்த சீசனில் பலமுறை சிறந்த பர்பாமராக கூட தேர்ந்தெடுக்கப்பட்டார் மனோ.

இதையும் பாருங்க : சுஜித்தின் மறைவு. உருக்கத்துடன் பிக் பாஸ் பிரபலங்கள் போட்ட பதிவு.

- Advertisement -

நடனம் மட்டும் அல்லாது பல்வேறு நடிகர்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பேசுவதிலும் நடிகர் மனோ வல்லவர். பிரபுதேவாவை போலவே பிரபுதேவா முன் பேசி அவரிடமிருந்து பாராட்டையும் பெற்றிருந்தார். மானாட மயிலாட நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் நடிகர் மனோ பங்கேற்று இருக்கிறார். மேலும், சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதித்த மனோ கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘புழல்’ என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்திருந்தார். அதே போல பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் மனோ.

Image result for மானாட மயிலாட மனோ"
Image result for மானாட மயிலாட மனோ"

ஆனால், கடந்த சில நாட்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் காணமுடியவில்லை. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையின் போது நடிகர் மனோ தனது மனைவி லிபியா உடன் அம்பத்தூர் வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய கார் சாலை தடுப்பில் மிகவும் பயங்கரமாக மோதியுள்ளது. விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். ஆனால், மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி திவ்யா விபத்தில் பலத்த காயம் அடைந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மனோவின் மனைவி லிபியாவை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோ மற்றும் லிபியா தம்பதியருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனோவின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதி சடங்கு குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெற்றவில்லை.

Advertisement