இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை தாண்டி பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனையும்,பூஜைகளும் செய்தும் கடைசியில் அழுகிய நிலையில் தான் சுர்ஜித்தை வெளியே எடுத்தார்கள். தமிழகமே சுஜித் நிலையை குறித்து கதிகலங்கி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது.
ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க அரசாங்கமும்,மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிந்தது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக செய்தார்கள்.
இதையும் பாருங்க : 18 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டான். களத்தில் இருந்து நேற்றே விடியோவை வெளியிட்ட நபர்.
அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் போன்ற 10 அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமானது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் பல போராடங்களை சந்தித்து வந்தார்கள்.
மேலும், குழந்தை சுலபமாக மூச்சு விடுவதற்கு ஆக்சிஜன் மற்றும் குழந்தை பயமில்லாமல் இருப்பதற்காக உபகரன்கள் எல்லாம் செய்தார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர்,கரூர் ஜோதிமணி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தை மீட்க்கும் பணியில் வெறித்தனமாக செயல்பட்டார்கள். இவ்வளவு முயற்சிகள் செய்தும், நான்கு நாட்களை கடந்தும் சுர்ஜித்தை உயிருடன் வெளியே எடுக்க முடியவில்லை. மேலும், சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் தான் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.
பின்னர் சுஜித் இறந்து எவ்வளவு மணி நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்வதற்காக சுஜித் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், சுர்ஜித்தின் இந்த கோர சம்பவத்திற்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது. அதோடு அந்த பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களும் சுர்ஜித் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும்,சமூக வலைத்தளங்களில் சுர்ஜித் இழப்பிற்கு சினிமா பிரபலங்களும், பிக் பாஸ் போட்டியாளர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும்,இணயங்களில் பிரபலங்கள் கூறியவை,பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது நியாயமே இல்லாத மரணம்” என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் அவர்கள் “இந்தியாவே தம்பித்து போகும் அளவிற்கு சுர்ஜித் மரணம்” உள்ளது என்று சொன்னார்.
மேலும்,சினிமா துறையில் பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் அவர்கள் கூறியது, “நான்கு நாட்களாக உணவு, உறக்கம் எல்லாத்தையும் மறந்து ஓய்வின்றி மக்களும், அரசாங்கமும் உழைத்து எந்த பலனின்றி குழந்தை இறந்து விட்டது. சுர்ஜித்தை மரணக் குழியில் இருந்து வெளியே எடுத்தாலும் நாங்கள் இப்போது துயர குழியில் விழுந்து விட்டோம்” எனக் கூறினார். இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் தர்ஷன் சுர்ஜித் இழப்பை தொடர்ந்து அனைவரும் இதயும் உடைந்து விட்டது என்றும்,சுர்ஜித்க்கு அமைதியான மௌன அஞ்சலியை செலுத்துவோம் என்றும் கூறியிருந்தார். மேலும்,காமெடி நடிகர் பாலசரவணன் அவர்கள் “எங்களை மன்னித்துவிடு, டிராபிக் ரூல்ஸ், அரசாங்கம் போடும் சட்டங்களை எல்லாம் மறந்தும், கவனிக்காமல் இருந்து இன்றைக்கு அரசை பழி சொல்லி உன்னை இழந்து விட்டோம் என்று கூறினார்.
அதோடு நடிகர் சதிஷ் அவர்கள் “அந்த மரண குழியை மூடாமல் அலட்சியமாக இருந்தவர்களை தண்டிக்கும் வரை RIP என்பதற்கு அர்த்தமே இல்லை” என்றும் தெரிவித்திருந்தார். இவர்களோடு இயக்குனர் சேரன் அவர்கள் சுர்ஜித் இறப்பிற்காக ‘விழிப்புணர்வுக்கு விதையானாய்…’ என்ற கவிதையை பதிவிட்டுள்ளார். மேலும் ஒட்டுமொத்த தமிழகமும் போராடி சுர்ஜித்தை மீட்க முடியவில்லை. மேலும், இனிமேலாவது இந்த மாதிரி அநியாயமாக எந்த ஒரு குழந்தையும் இழக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்கள்.