போடா ம***னு சொல்லிட்டு போ – பாபநாசம் குறித்து பேசிய மாரி செல்வராஜ். கடுப்பில் கமல் ரசிகர்கள்.

0
1912
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் தங்களது முதல் படத்திலேயே மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுவிடுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவால் திரும்பி பார்க்கப்பட்டார். இந்த படத்திற்கு சர்வதேச விருதுகள் கூட குவிந்தது. சமீபத்தில் கூட இந்த படத்தை பற்றிய கேள்வி ஒன்று குரூப் தேர்வில் கேட்கப்பட்டு இருந்ததை பலரும் பாராட்டியும் இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் கமல் நடித்த பாபநாசம் படத்தை பற்றி விமர்சித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும், தமிழில் 2015 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் அவர்கள் பாபநாசம் என்ற பெயரில் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமலஹாசன், கவுதமி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இதையும் பாருங்க : ஒரே ஒரு டீவீட்டால் அரவிந்த் சாமி திட்டி தீர்த்து வரும் விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?

- Advertisement -

மலையாளத்தை போன்றே தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது மகளை ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் ஒரு நபரை கமல் மகள் அடித்து கொன்றுவிடுத்தார். மகள் பயத்தில் செய்த இந்த தவறை கமல் எப்படி மறைத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவார் என்பது தான் கதை. இப்படி ஒரு நிலையில் சமூகத்தில் பெண்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதனை அவர்களை எப்படி பயம்புறுத்தபடுகிறார்கள் என்று மாரி செல்வராஜ் பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே எல்லா பெண்களுக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறையை போன்ற ஒரு மாயையை உருவாக்கி விடுகிறார்கள். பொள்ளாச்சி போன்ற எல்லாம் இடங்களில் பெற்றோர்கள் அவர்கள் போனை பறித்துக்கொண்டு விட்டார்களாம். பயத்தினால் அப்பா அம்மாவும் மாறிவிடுவார்கள் நீங்கள் மாறிவிடுவீர்கள். இந்த வகையான ஒரு மோசமான உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறிய மாரி செல்வராஜ்கமல் நடித்த பாபநாசம் படத்தையும் உதாரணமாக சொல்லியுள்ளார்.

-விளம்பரம்-

அதில், பாபநாசம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால், அந்த படத்தின் அந்த பெண்ணிடம் உன்னை வீடியோ கொடுத்தால் அவன் தானே வெட்கப்பட வேண்டும் என்று சொல்லமாட்டார். அப்போது இன்னொருவன் படம் இருந்தால் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த படம் இங்கே ஓடியது. ஏன் ஓடியது என்றால் அந்த படத்தில் அந்த அச்சம் தான் முதலீடு அவ்வளவு பெரிய கமலஹாசனே அந்த பெண்ணிற்கு போலீசிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பார். ஆனால், எங்கேயும் வீடியோ எடுத்தால் பரவாயில்லை போடா மயிறு ஒரு சொல் என்று சொல்லவே மாட்டார். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இங்கே 250 பெண்களைக் வீடியோ எடுத்திருக்கிறார்கள் அதில் முதல் பெண் வீடியோ எடுத்தது நீதானடா நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தால் 250 பெண்கள் காப்பாறப்பட்டு இருப்பார்கள் என்று கூறியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த வீடியோவை கண்டு பலர் பாராட்டினாலும், ஒரு மற்றும் ஒரு தரப்போ மாரி செல்வராஜ் பாபநாசம் படத்தை முழுமையாக பார்க்காமல் இப்படி பேசுகிறார். அந்த படத்தில் அந்த பெண் செய்த கொலையில் இருந்து தப்பிக்க வைக்கத்தான் அவர் முயற்சிப்பாரே தவிர எந்த இடத்திலும் அந்த பெண் தவறு செய்தது போல காட்டப்படவில்லை என்று கூறி வருகின்றனர்.

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Advertisement