மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி குறித்து மதன் கௌரி போட்ட பதிவு – கண்ட மேனிக்கு திட்டும் ரசிகர்கள்.

0
11363
- Advertisement -

பிரபல யூடுயூபரான மதன் கௌரியை ரஜினியின் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். யூடுயூபில் பல்வேறு நபர்கள் பல விதத்தில் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் கூகுளில் இருந்து பல சுவாரசியமான விஷயங்களை தேடி கண்டுபிடித்து அதனை எளிய தமிழில் கூறி ரசிகர்களை கவர்ந்தவர் மதன் கௌரி. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அவ்வளவு ஏன் இவர் சொன்ன பல விஷயங்களை வைத்து தான் பூமி படத்தையே எடுத்தனர் என்ற பேச்சுகளும் உண்டு. இப்படி ஒரு நிலையில் இவரை ரஜினி ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தை கலைத்து இனி அரசியலுக்கு வரப் போவது இல்லை என்று அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன ? நிலை என்ன ? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : மாடல் அழகியாக இருந்த போது பிகினி உடையில் ramp walk செய்துள்ள நிதி அகர்வால்.

- Advertisement -

அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதிவுகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியல் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை.

ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் ஏதுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்று தெரிவித்திருக்கிறார்

-விளம்பரம்-

ரஜினியின் இந்த அறிக்கையை தொடர்ந்து இது தொடர்பாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார் மதன் கௌரி. அதில் ‘ரஜினிகாந்த்தனது மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டார். எதிர் காலத்தில் எந்த ஒரு அரசியல் திட்டமும் இல்லை’ என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு தான் மதன் கௌரியை, ரஜினியின் ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமாக அமைந்து உள்ளது. அவ்வளவு பெரிய புடுங்கியா நீ பேர் சொல்லி பதிவு போடுறமதன் கௌரி ரஜினியை எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம் என்றும் ரஜினி சார் என்று மரியாதையுடன் அழைக்குமாறு கூறி வருகின்றனர். மேலும், ஒரு ரசிகர்கள் ”என்று மதன் கௌரியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement