‘அலைபாயுதே’ முன்பாகவே மாதவனை ஆடிசன் செய்துள்ள மணிரத்னம். இந்த காரணத்தினால் ரிஜெக்ட் செய்யப்பட்டாராம்.

0
1302
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. சமீபத்தில் தான் அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அலைபாயுதே என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் வைரலானது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் மாதவன் அவர்கள் அலைபாயுதே படத்திற்கு முன்னதாக இருவர் படத்தில் நடிக்க வேண்டியது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாதவன் அவர்களை இருவர் படத்திற்காக ஆடிஷன் செய்ய அழைத்தார் மணிரத்தினம். பின் உனது கண்கள் இளமையாக இருக்கின்றது. இந்த வேடத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று கூறி மணிரத்தினம் அனுப்பினார்.

- Advertisement -

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தான் இயக்குனர் மணிரத்னம் மீண்டும் மாதவனை அழைத்தார்.
மேலும், அலைபாயுதே படத்தில் மாதவனை நடிக்க வைத்தார். மேலும், இந்த ஊரடங்கு நிலையில் பல நடிகர், நடிகைகளும், பிற துறை பிரபலங்களும் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube தளத்தின் வாயிலாக அனைத்து துறை கலைஞர்களுடனும் உரையாடி வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் நடிகர் மாதவனுடன் தனது youtube வழியாக உரையாடி உள்ளார். அந்த உரையாடலை தற்போது மாதவன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement