மத நம்பிக்கையை இழிவுபடுத்தினாரா மாதவன்? சர்ச்சையில் சிக்கிய வெப் சீரிஸ். காரணம் இந்த காட்சி தான்.

0
583
madhavan
- Advertisement -

கோலிவுட்டின் சாக்லேட் பாயாக திகழ்பவர் மாதவன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த அலைபாயுதே படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

- Advertisement -

மாதவன் வெப் சிரிஸ் :

மேலும், இந்த படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மாதவனின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் மாதவன் நடித்து முடித்திருக்கும் Decoupled வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளிவந்து இருக்கிறது. இந்த வெப்சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ்ஸில் இருந்து வரும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,

-விளம்பரம்-

ஏர் போர்ட் காட்சி :

மாதவன் ஒரு அறைக்குள் நுழைகிறார். அங்கே இஸ்லாமியர் ஒருவர் பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றனர். அவர் செய்வது போலவே மாதவன் உடற்பயிற்சி செய்கிறார். இதை அந்த நபர் பார்க்கிறார். உடனே மாதவன் இந்து கடவுளை கும்பிடுவது போல செய்து சமாளிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறதா ?

இதை பார்த்து பலரும் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் இந்த காட்சி இருக்கிறது என்றும், இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த காட்சியில் நடித்த மாதவனுக்கு கண்டனம் தெரிவிக்க என்றும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுபோன்று பல காட்சிகள் Decoupled வெப்சீரிஸ்ஸில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement