தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த அலைபாயுதே படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் பட்டைய கிளப்பி வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் மாதவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மகன் தாய்க்கு கொடுத்த பரிசு:
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் ஏதாவது ஒரு பரிசை வாங்கி கொடுத்தால் அவர்களுடைய சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது. அந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இருக்காது. அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்தது. விக்னேஷ் என்கிற ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில் அவர், இந்த மொபைல் போனின் விலை 8800 ரூபாய் தான். ஆனால், அதற்கு என்னுடைய அம்மா அடைந்த சந்தோஷத்திற்கு விலையே கிடையாது.
வைரலாகும் வீடியோ:
அவர்களின் பிறந்தநாள் பரிசு என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் அவருடைய தாய் அந்த மொபைல் போனை பார்த்தவுடன் ‘என்ன பெத்த சாமி, ஏண்டி இப்படி பண்ற காசு இல்லாத சமயத்தில் என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறியிருக்கிறார். இப்படி தாய்க்கு பிறந்த நாள் பரிசாக மொபைல் போன் வாங்கி கொடுத்த மகனுடைய வீடியோ சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்த வீடியோ பார்த்து பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மாதவன் பதிவிட்ட டீவ்ட்:
இந்த நிலையில் தற்போது நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘இந்த மகிழ்ச்சிக்கு விலை இல்லை’ என்று கூறியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து பலரும் தாய்க்கு மகன் கொடுத்த பாசமான பிறந்தநாள் பரிசுக்கு மதிப்பில்லை என்று தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோவும், மாதவன் பதிவிட்ட கருத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மாதவன் நடிக்கும் படம்:
மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மாதவன் மகன் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்து இருந்தார். அதோடு மாதவன் தற்போது ராகெட்ரி: நம்பி எஃபெக்ட் விளைவு படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் எல்லாம் கடந்த 2020 ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.