கேலி செய்த நெட்டிசன்கள் ‘பஞ்சாங்க’ வசனத்தையே நீக்கிய மாதவன் – எப்படி இருக்கிறது ‘ராக்கெட்ரி’ – முழு விமர்சனம் இதோ.

0
900
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்து இருந்த மாதவனின் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

இந்தியாவின் சொந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் கனவை சுமந்த விஞ்ஞானியின் வாழ்க்கையும், அவர் சந்தித்த விளைவையும் சொல்லும் படமாக ராக்கெட்ரி தி நம்பி விளைவு இருக்கிறது. நாடே கொண்டாட வேண்டிய விஞ்ஞானி நம்பி நாராயணன். ஆனால், இவர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரின் குடும்பம் சமூகத்தால் அவமானப்படுத்தப்படுகிறது. அதற்கு முன்பு என்ன நடந்தது? அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற ஒரு பதட்டத்துடன் படம் தொடங்குகிறது. விக்ரம் சாராபாயின் சிஷ்யர்களாக நம்பி நாராயணன், அப்துல் கலாம் இருக்கின்றார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : ரோப்பும் இல்ல, டூப்பும் இல்ல – அப்போதே படு ரிஸ்க்கான ஸ்டாண்டில் மாஸ் காட்டியுள்ள கேப்டன். ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட Avm நிறுவனம்.

அதில் நம்பி Liquid Fuel என்ஜின் தயாரிப்பை முன்னெடுத்து வைக்கிறார். நாசா Fellowship வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் உலகின் தலை சிறந்த பேராசிரியர் Luigi Crocco-விடம் நம்பி பயிற்சி பெறுகிறார். பின் நம்பிக்கு நாசாவில் பெரும் சம்பளத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், நம்பி Isro-விற்கு தேவை என விக்ரம் சாராபாய் அழைக்கிறார். இறுதியில் தாய் நாட்டிற்கான சேவை தான் முக்கியம் என்று நம்பி இந்தியா திரும்பிகிறார். இந்தியா விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைய துடிக்கும் காலகட்டம்.

-விளம்பரம்-

நம்பி நாராயணன் குறைந்த தொகையை கொண்டு எப்படியாவது ராக்கெட் எஞ்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவு காண்கிறார். அதற்காக இந்திய விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் செல்கிறார். அங்கு உருவாக்கப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்புகிறார் நம்பி. மேலும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டாலும் சொந்த எஞ்சினை தயாரிக்க பல ஆண்டுகள் ஆனது. இதற்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே அரசிடமிருந்து கிடைக்கிறது.

அதில் 60 லட்சம் மட்டும் செலவழித்து Liquid Fuel எஞ்சினை நம்பி கண்டுபிடிக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்ததை மிக மிக குறைந்த செலவில் சாத்தியமாக்கி சாதனை படைக்கிறார் நம்பி. இதைத்தொடர்ந்து Cryogenic எஞ்சின் பக்கம் திரும்புகிறார் நம்பி. அதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரஷ்யாவில் இருந்து நான்கு எஞ்சின்களை வாங்க ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால், இது சாத்தியமானால் இந்தியா Satellite Market -ல் நுழைந்துவிடும் என்று எண்ணி அமெரிக்கா எஞ்சினை கொடுக்க கூடாது என்று ரஷ்யாவை மிரட்டுகிறது.

அதை மீறி எஞ்சினை நம்பி எப்படி இந்தியாவிற்கு கொண்டு வந்தார்? அதற்கு பின் நடக்கும் சம்பவங்கள் நம்பியின் வாழ்கையை எப்படி புரட்டிப்போடுகிறது? Isro அமைப்பிற்கு இயக்குனராக வேண்டிய நம்பி என்ன ஆனார்? அதற்கு பின்னால் இருந்த சதியை வென்றாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு அவர் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேக்கப் இல்லாமல் தலை முடியை இயற்கையாகவே நடிக்க வைத்திருக்கிறார் மாதவன். பின் சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யாவும், நம்பி மனைவியாக வரும் சிம்ரனும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

ஒரு செய்தியை நம்பி ஒரு குடும்பத்தை சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களை எவ்வாறெல்லாம் நடத்துகிறார்கள்? அவரை நிரபராதி என நீதிமன்றம் கூறிய பிறகும் தங்கம் பார்வையை மாற்றுவது போன்ற காட்சிகள் மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ராக்கெட் படத்தின் முதல் பாதி முழுவதும் ராக்கெட் எஞ்சின் பற்றியே நகர்கிறது. ஆனால், கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் ரசிகர்களுக்கு புரியுமா? என்பதுதான் கேள்விக்குறி. நம்பியின் வாழ்க்கை பயணம் சாதனை பெரியது என்பதால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, ரஷ்யா என பல நாடுகளுக்கு கதை பயணிக்கிறது.
அதன் காரணமாக பல சம்பவங்கள் நடக்கிறது.

இரண்டாம் பாதியில் நம்பி கடந்த சம்பவங்களை உணர்வுபூர்வமாக மாதவன் கூற முயற்சிக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். அதிலும் இரண்டாம் பாதியில் மாதவன் கூறும் வசனங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் உறைய வைத்திருக்கிறது. மேலும், உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லை. படம் மெதுவாக செல்வது போன்ற உணர்வை கொடுக்கிறது. இருந்தாலும் கதையிலிருந்து பார்வையாளர்களை வெளியில் கொண்டுவர வரவில்லை. படத்தில் இடம் பெற்ற பஞ்சாங்கம் குறித்த வசனங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் எழுந்த சர்ச்சை தான். எல்லோரும் பார்க்க வேண்டிய படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

பிளஸ்:

கொண்டாடப்பட வேண்டிய விஞ்ஞானியின் கதையை மாதவன் கையில் எடுத்தது ஒரு சிறந்த முயற்சி.

நம் இந்தியா கண்ட மாபெரும் சாதனை பற்றி பலரும் தெரிந்துகொள்ளும் தருணம்.

படத்தில் மாதவன், நம்பி நாராயணனாகவே வாழ்ந்து இருக்கிறார்.

சிம்ரன், சூர்யா தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

மைனஸ்:

முதல் பாதி மெதுவாகச் சென்றது.

வசனங்கள் சில இடங்களில் புரியவில்லை.

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைபாடுகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் ராக்கெட்ரி நம்பி விளைவு- வெற்றியை எட்டும்.

Advertisement