தேசிய அளவில் 7 பதக்கங்களைக் குவித்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த் – அதுவும் என்ன விளையாட்டில் பாருங்க

0
1841
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.
ஆரம்பத்தில் இவர் தொலைக்காட்சி தொடர்களில் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
Madhavan's son Vedaant wins bronze for India in swimming

மேலும், முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனை தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக மாதவன் அவர்கள் மிக அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாதவனின் மகன் செய்த சாதனை குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவனின் மகன் பெயர் வேதாந்த். இவர் ஒரு இந்திய நீச்சல் வீரர்.

Film star R Madhavan's son Vedaant wins swimming bronze medal | Other  Sports News | Zee News

இவர் இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம், விருதுகள் வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் நடந்த 47th Junior National Aquatic Championships 2021ல் நீச்சல் வேதாந்த் கலந்து கொண்டு உள்ளார். அப்போது அந்த போட்டியில் வேதாந்த் 7 பதக்கங்களை பெற்று உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மாதவன் மகனின்சாதனை குறித்து பாராட்டியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement