அது மது இல்ல கிறீன் டீ – நடுரோட்டில் நடந்த தகராறு. இயக்குனர் AL விஜய் கொடுத்த விளக்கம்.

0
150
- Advertisement -

இயக்குனர் ஏ எல் விஜயிடம் குடிபோதையில் நபர் ஒருவர் தகராறு செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஏ எல் விஜய்யும் ஒருவர். இவர் முதலில் பிரியதர்ஷினி இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
அதன்பின்பு 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கிரீடம் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் மதராஸ் பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் கடைசியாக ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி இருந்தார். மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படம் தலைவி.

- Advertisement -

ஏ எல் விஜய் இயக்கிய படம்:

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவம் முதல் தொடங்கி அரசியலில் நுழைந்தது பிறகு அவர் முதல்வராக பதவியேற்று நாட்டை ஆண்டது என அனைத்துமே இயக்குனர் அழகாக சொல்லி இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

ஏ எல் விஜய் குறித்த சர்ச்சை:

அதற்கு பின் ஏ எல் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் இடம் நபர் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது. அதாவது, இன்று படப்பிடிப்புக்கு செல்வதற்க்காக இயக்குனர் ஏ எல் விஜய் அவர்கள் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் காரில் சென்று இருந்தார். மேலும், இவருடன் மேனேஜர் ஹரி மற்றும் உதவி இயக்குனரும் சென்று கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

குடிபோதை நபர் தகராறு:

அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் நபர் ஒருவர் மதுபோதையில் வந்திருக்கிறார். அவர் ஏ எல் விஜயின் கார் கண்ணாடியை இடித்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அடுத்து விஜய்யுடன் வந்த நபர்கள் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உடனே அந்த நபர் இயக்குனர் விஜயின் மேனேஜர் ஹரியை ஹெல்மெட்டால் தாக்கியிருக்கிறார். இதனை அடுத்து இவர்கள் உடனடியாகவே காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். பின் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

விஜய் கொடுத்த விளக்கம்:

அதற்குள் மது போதையில் தகராறு செய்த அந்த நபர் தப்பி சென்றிருக்கிறார். பின் இயக்குனர் விஜயின் மேனேஜர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி மதுபோதையில் வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால், விஜய்யின் கையில் மதுபானம் இருந்திருக்கிறது. விஜயின் மேல் தான் தவறு இருக்கும் என்றெல்லாம் பலருமே கூறியிருந்தார்கள். இதற்கு இயக்குனர் விஜய், என் கையில் வைத்திருந்தது கிரீன் டீ. எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. அதுவும் தற்போது காவல் நிலையத்தில் இருக்கிறது. வேண்டுமானால் நான் அனைத்து பரிசோதனைக்கும் தயார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement