பிக் பாஸ் வீட்டில் வனிதா கேட்ட சர்ச்சை கேள்விக்கு இப்போது பதிலடி கொடுத்த மதுமிதா.! வைரலாகும் வீடியோ.!

0
15385
vanitha-madhumitha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பரபரப்பையும் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.அதில் ஜாங்கிரி மதுமிதா பிக் பாஸ் சீசன் 3 இல் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவையும், அன்பையும் பெற்று இருந்தவர்.ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார்.அதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. சில வாரங்களாகவே நடந்த மதுமிதாவின் சர்ச்சைக்குரிய பேட்டிக்கு அப்புறம் மதுமிதாவுக்கும், அபிராமிக்கு நடந்த பிரச்சனை குறித்து வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

-விளம்பரம்-
Image

தற்போது வெளிவந்த மதுமிதாவின் புதிய வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஆரம்பத்தில் ஏற்பட்ட மதுமிதா, அபிராமி பிரச்சினை இப்போது தொடங்கியது.அதில் அவர் கூறியது,ஆரம்பத்தில் அபிராமி அவங்க ஒரு பொம்மைக்கு டிரஸ் போட்டு அந்த பொம்மையை எனக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை என்று சொல்லியிருந்தது எனக்கு தப்பா பட்டுச்சு.அதனால என்னுடைய கருத்தை நான் சொல்லியிருந்தேன். இந்த நிகழ்ச்சியை எல்லாரும் பாக்குறாங்க,எந்த ஒரு தமிழ் பொண்ணு இந்த மாதிரி பண்ண மாட்டாங்க நான் சொன்னேன். அதற்கு வனிதா அவர்கள் தமிழ் பொண்ணுங்க ” கட்டின தாலியை கழட்டி வைச்சிட்டு வருவாங்களா” என்று கேட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகுது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு சில விதிமுறைகளை வைத்திருந்தார்கள் .

இதையும் பாருங்க : பிசுதா யாகோ ? ஷெரீனை சிங்களத்தில் திட்டிய தர்ஷன்.! அப்படினா என்ன தெரியுமா.!

- Advertisement -

அதில் நகைகளை எல்லாம் போட்டு கொண்டு வரக்கூடாது என்றும், அப்புறம் தாலி செயினை போடும்போது மைக்கில் உரசும், தேவை இல்லாமல் பிரச்சினை ஏற்படும். அது மட்டுமில்லாமல் வீட்டிற்குள்ளே நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் போது யாராவது பிடித்து இழுக்கும்போது செயின் பிஞ்சு , கழுத்தில் காயம் ஏற்பட்டாலும் பிரச்சனைதான் என்று அவர்கள் கூறினார்கள். இது எனக்கு சரி எனபட்டது.மேலும், என்னுடைய கணவருடனும் நான் ஆலோசனை செய்தேன் . அவரும் சரி ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறினர். அதனால் தான் கழட்டி வச்சிட்டு வந்தேன் என்று கூறினார்.ஆனால் அவங்க தமிழ் பொண்ணுங்க ஏன் தாலி கழட்டி வச்சிட்டு வரணும் என்று சொன்ன வார்த்தையை மட்டும் டிவியில் காண்பித்து நான் கூறிய வார்த்தை காண்பிக்கவில்லை. இது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்று கூறினார்.

இதைப்பத்தி நான் ஃபாத்திமா பானு அம்மாவிடம் பேசினேன் . அவர்கள் விடுமா இத பத்தி நீ நினைக்காத என்று சொன்னங்க. .அவங்க சொன்ன விதிமுறைகளை தான் நீ செய்திருக்கிறாய் எனக்கு ஆறுதலாகவும் பேசினாங்க.நான் இந்த தமிழ்-பொண்ணு சொன்னது யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை .மேலும்,நான் பொதுவான விஷயத்தை தான் சொன்னேன்.அதுமட்டுமில்லாமல் நாம் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போது எப்படி ஃபீல் ஆகும் என்று தான் என்னுடைய கருத்தை சொன்னேன், யாரையும் குறிப்பிட்டு சொல்லல. ஆனா அவங்க அதை ஒரு பிரச்சினையாகவே மாத்திட்டாங்க. ஒரு சின்ன விஷயத்தை பேசினத அவங்க அரசியலாக மாத்திட்டாங்க.

-விளம்பரம்-

ஆனால் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் உடன் ஏற்பட்ட விவகாரங்களில் என்னை பேச விடாமல் அவர்கள் 8 பேரும் என்னை வைத்து தாறுமாறாக பேசினார்கள். இந்த பிரச்சினையில் சேரன் சாரும், கஸ்தூரி மேடம் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் பேசின பேச்சு என்னை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. என்னசெய்வதென்று அறியாமல் நான் என் கையை அறுத்துக் கொண்டேன். அப்போது கூட அந்த எட்டுப் பேரில் ஒரு சில பேர் ரத்தம் கொட்டி இருக்கும் நிலையில் கூட இதெல்லாம் டிராமா என்று கூறினார்கள். அந்த எட்டு பேரில் யாரும் ஆறுதலாகவும் பேசவில்லை, முதல் உதவியும் செய்யவில்லை. சேரன் சாரும், கஸ்தூரி மேடம் தான் எனக்கு ஆதரவளித்து எனக்கு முதல் உதவி செய்தார்கள் .அதற்கு பின்னால் நான் விக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.இதனால் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement