அமரன் படம் குறித்து ஆவேசமாக நடிகை மதுவந்தி பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைனாத்தில் சில தினங்களுக்கு முன்பு பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இதில் நடிகை கஸ்தூரி, ஒய்.ஜி மதுவந்தி உட்பட பல பிராமண சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது மதுவந்தி, ஒருவரைப் பற்றி படம் எடுத்தால் அவர் எந்த சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்பதை தெளிவாக காட்ட வேண்டும். அதை சொல்வதற்கு இயக்குனருக்கு துப்பு இருக்க வேண்டும். உள்ளதை அப்படியே சொல்வதற்கு தைரியம் வேண்டும். அவ்வளவு பெரிய இராணுவ வீரரை(முகுந்த் வரதராஜன்) பற்றி ஒருவர் படம் எடுக்கிறார். அதுவும் தியேட்டர்களில் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆனால், அவர் பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு வந்துவிட்டது.
ஆவேசத்தில் மதுவந்தி பேட்டி:
மற்ற சமூகத்தில் இருந்து வந்தவர்களை ஆகா ஓகோ என்று பாராட்டி படம் எடுக்கிறீர்கள். போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்றெல்லாம் பாடினீர்கள். அதையெல்லாம் நாங்களும் வரவேற்றோம். ஆனால், முகுந்த் வரதராஜன் பிராமணர் என்று சொல்லி கொள்வதில் என்ன வெட்கம்? அப்படி மூடி மறைத்து ஒரு படம் ஏன் எடுக்கணும்? நான் படத்தை பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால், இந்த சிந்தனை ஏன் வந்தது? இதுக்கு பெயர் தான் பயம். இவரோட சமூக அடையாளத்தை சொல்லிவிட்டால் படம் நிற்காது, விநியோகிஸ்தர்கள் புக் செய்ய முடியாது என்று நினைத்து தான் இந்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
https://youtu.be/KjT1vm4gb4I?si=VShv1-b7DjS0GmZ5
கேவலமாக பேச காரணம்:
இப்படி பயத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. தயவுசெய்து பயத்தை தூக்கி போட்டு களத்தில் இறங்கி போராட வேண்டும். இயக்குனர் யாரை பார்த்து பயப்படுகிறார் என்று புரியவில்லை. நான் சினிமா துறையில் இருந்து கொண்டே தான் இந்த கேள்வியை கேட்கிறேன். இதனால் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மற்ற சமுதாயத்தை பற்றி படம் எடுத்தால் அதைப்பற்றி நேரடியாக பேசுகிறார்கள். ஆனால், பிராமணர் சமூகத்தினர் வந்தால் மட்டுமே ஏன் மறைக்கிறீர்கள்? பிராமண சமுதாயம் மிகப்பெரியது.

முகுந்த் ஜாதி குருத்து சொன்னது:
இந்த சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை கொச்சைப்படுத்தி பேச வேண்டிய அவசியமும் கிடையாது. பிராமண சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோருமே ஒன்று சேர வேண்டும் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோ தான் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படம் வெளிவந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் அமரன்.

பிராமணர் குறித்து சொன்னது:
இப்படத்தில் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என பாராட்டுவதற்கு ஏராளமான அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இணையவாசிகள் படம் முழுக்க நெருடலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வந்தார்கள். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படத்தின் கதாபாத்திரங்களை திரையில் காட்டியதில் நம்பகத்தன்மை இல்லை என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். மேஜர் முகுந்தாக நடித்த சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தை ஏன் அடையாளப்படுத்தவில்லை என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்தை காட்டுவதில் தயக்கம் காட்டியுள்ளார்கள் என்று விமர்சித்து வந்தார்கள்.






