கடந்த சில நாட்களாக நடிகை மதுவந்தி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. இவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளார் என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன் மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது வங்கி கணக்கில் உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ் மோடி செலுத்தி இருப்பதாக தெரிவித்து இருந்தார். மதுவந்தியின் இந்த பேச்சை கேட்டு நெட்டிசன்கள் கிண்டல், கேலியும் செய்து இருந்தார்கள்.
இந்நிலையில் நடிகை மதுவந்தி அவர்கள் இதற்கு மன்னிப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக நான் வெளியிட்ட வீடியோவில் நான் ஒரு தப்பு பண்ணிவிட்டேன். நான் அந்த தப்பை செய்து இருக்க கூடாது. இது வந்து human error. இந்த தவறுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு. வேற யாரையும் சொல்ல முடியாது. நான் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இதையும் பாருங்க : அதன் பின்னர் தான் கிரிக்கெட்டை விட்டுவிட்டேன். வருத்தப்பட்ட விஷ்ணு விஷால். ஆறுதல் கூறிய அஸ்வின்
இனிமேல் நான் கொடுக்கும் வீடியோவில் இந்த மாதிரி தவறுகள் வராமல் கவனமாக வீடியோக்களை கொடுக்கிறேன். ஆனால், இந்த தருணத்தில் சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இத்தனை நாளாக நான் நல்ல நல்ல பாயிண்டுகளை பல வீடியோக்களில் கொடுத்திருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் பரப்பவில்லை. இதே வீடியோவில் இது ஒரு தவறை தவிர்த்து மற்ற எல்லா விஷயங்களும் கரெக்டாக தான் சொல்லி இருக்கிறேன்.
ஆனால், அதை பற்றி ஏன் கூற வரவில்லை. அப்ப தப்பு செய்தால் மட்டும் தான் நீங்கள் பிரபலம் ஆகுவீர்கள். மேடைக்கு மேடை ஒரு தலைவர் பிட்டு பேப்பரை வைத்து கிட்ட தவறாக பேசி இருக்கிறார். இது போல் பல பேர் தவறு செய்து இருக்கிறார்கள். ஆனால், யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. நீங்களும் அதை பற்றி கேட்கவில்லை. திமுக கட்சியில் முதல் கூட்டம் அமைத்த போது இருந்ததே 28 பேர் தான். அதில் 28 ஆவது நபராக இருந்தவர் தான் தலைவரானார். ஆனால், அந்த 27 பேரையும் மறந்து விட்டார்கள்.
அந்த 28 ஆவது நபரின் மொத்த குடும்பம் தான் ஒட்டுமொத்த கட்சியையும் ஆட்டி படைக்கிறது. இதெல்லாம் ஏன் என்னவென்று யாரும் கேட்க வில்லை. ஆனால், நான் என் தப்பை ஒத்துக் கொள்கிறேன். ஏன்னா, நான் ஒரு இந்து. கடவுள் நம்பிக்கை உள்ளவள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் தான் சத்தியத்திற்கும், மனசாட்சிக்கும் பயப்படுவார்கள். நான் என் மனசாட்சிக்கு பயந்து தான் மன்னிப்பு கேட்கிறேன். இப்ப நான் சொன்ன அத்தனை பேரில் ஒருத்தராவது மன்னிப்பு கேட்டு இருக்கிறார்களா? அப்படி மன்னிப்பு கேட்ட வீடியோ எங்கேயாவது இருந்தால் எனக்கு சென்ட் பண்ணி காமிங்க.
இதையும் பாருங்க : தன்னை தாக்கியதால் கைதான நபர்கள். இருப்பினும் அவர்களின் குடும்பத்தை பற்றி வருத்தப்பட்டு ரியாஸ் கான் வெளியிட்ட வீடியோ.
இந்த தருணத்தில் நான் எல்லா கருப்பு சட்டை காரர்களுக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்னை லட்சக்கணக்கான மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். அந்த லட்சக்கணக்குல பத்து பேரு என்னுடைய கருத்தை புரிந்து கொண்டு இருப்பார்கள். அந்த பத்து பேருக்கு எனக்கு காண்பித்து கொடுத்தற்கு நன்றி. கமல் சார் கூட ஒரு படத்தில் சொல்லியிருப்பாரு மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன். நான் பெரிய மனுஷியாக இருக்கிறேன் என்று கூறினார்.