தன்னை தாக்கியதால் கைதான நபர்கள். இருப்பினும் அவர்களின் குடும்பத்தை பற்றி வருத்தப்பட்டு ரியாஸ் கான் வெளியிட்ட வீடியோ.

0
1791
riyaz

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டின் வெளியில் நின்றுகொண்டு இருந்தவர்களை தட்டி கேட்ட ரியாஸ் கானை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும் பரப்ரபை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் பல படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ‘பாடிபில்டர்’ ஆவார். இதனால் உடற் பயிற்சி செய்வதால் அதிக கவனம் செலுத்தும் ரியாஸ் கான், சென்னை பனையூர் ஆதித்யாராம் நகரில் உள்ள தனது குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு சிலர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்ததை கண்ட ரியாஸ்கான் கோருவதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கும் நிலையில் இப்படி கூட்டமாக நின்று பேசலாமா என்று கேட்டிருக்கிறார். அதன் பின்னர் அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் ரியாஸ்கானிடம் வாக்குவாதம் செய்ய அந்த கும்பலில் இருந்த ஒருவர் நடிகர் ரியாஸ் கானை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : ஏன் இப்படி ஒரு ஆடை. கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்

- Advertisement -

இதையடுத்து நடிகர் ரியாஸ்கான் கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரியாஸ் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலை 5 மணிக்கு என் வீட்டில் இருந்தேன் அப்போது என் வீட்டின் மூளையில் 10 பேர் நின்று கொண்டு இருந்தார்கள் . இதனால் நான் அவர்களிடம், ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு இருக்கும் போது இப்படி கும்பலாக நிக்கலாமா என்று கேட்டதற்கு அவர்கள் காத்து வாங்க வந்ததாக கூறினார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

Stay safe#fight#covid19#

A post shared by Riyaz Khan (@riyazkhan09) on

அதற்கு நான், உங்க வீட்டின் மொட்டை மாடியில் நின்று காற்று வாங்குங்கள் என்று கூறினேன். அதானே நியாயம்? அதற்கு அவர்கள் நான் உங்க வீட்டில் உள்ளேயே நிக்கிறோம் என்று பேசிகொண்டே இருந்த போது , ரியாஸ் கானா இருந்த சினிமாவில் இருக்கட்டும் எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். அதற்கு நான், உங்கள் நல்லதுக்கு தான் சொல்லிறேன் என்று சொன்னேன். பின்னர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்த போது ஒருவன் என் மண்டையில் அடிக்க வந்தான்.

இதையும் பாருங்க : எந்திரன் படத்தில் ரோபோ ரஜினியாக நடித்தது இந்த பிரபல நடிகர் தானா. அவரே பகிர்ந்த Vfx வீடியோ இதோ.

நான் விலகியதால் என் தோளில் அடிபட்டு விட்டது. பின்னர் போலீஸ் வந்து அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். ஏன் இது யாருக்கும் புரியவில்லை கைதான அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் எல்லாம் தனது பிள்ளிகளை போலீஸ் புடித்து கொண்டு போய்விட்டார்கள் என்றால் எவ்வளவு வ்ருத்தப்படுவார்கள் என்று உருக்கமுடன் கூறியுள்ளார். தன்னை தாக்கினாலும் அவர்கள் குடும்பத்தினரை பற்றி யோசித்துள்ள ரியாஸ் கானின் இந்த மனதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Advertisement