பிரேமம் போலவே லியோ படத்திலும் எனக்கு அது நடந்தது – மடோனா செபாஸ்டியன்

0
357
- Advertisement -

லியோ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் மடோனா செபாஸ்டியனும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மற்றும் இல்லாமல் பின்னணி பாடகர் ஆவார். இவர் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் ப்ரேமம், கவன், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் நடித்திருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் எலிசா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்து இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் மடோனா செபாஸ்டியன் மக்கள் மத்தியில் அதிகமாக பாராட்டை பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் லியோ படம் தொடர்பாக சமீபத்தில் மடோனா செபாஸ்டியன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், லியோ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக தான் வைத்திருந்தார்கள் படக்குழு. இதை சஸ்பென்ஸாக வைக்க சொல்லி பட குழு சொல்லவில்லை. ஆனால், கதையின் முக்கியத்துவம் தெரிந்து கொண்டு தான் நான் வெளியே சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். நான் யாரிடமும் என்னுடைய கதாபாத்திரத்தை குறித்து சொல்லவில்லை. படம் வெளியான முதல் நாள் காலை 5.56 மணிக்கு எனக்கு நிறைய மெசேஜ் வந்தது.

நான் கூட படம் முடிந்து 9 மணிக்கு பிறகு தான் என்னை அழைத்து பேசுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு முன்பே எனக்கு பல பேரிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டிருந்தது. இந்த கதாபாத்திரத்துக்காக என்னை தேர்வு செய்த இயக்குனருக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னால் இந்த கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியுமா என்று நினைத்திருந்தேன். இந்த வாய்ப்பை கொடுத்து என்னை மெருகேற்றியது இயக்குனர் தான். அது மட்டும் இல்லாமல் லியோ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை குறித்து வெளியில் தெரியவில்லை என்று நான் வருத்தப்பட்டதும் இல்லை. காரணம் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமாக இருப்பதை அறிந்து தான் அமைதியாக இருந்தேன்.

என்னுடைய முதல் படமான பிரேமம் படத்திலும் இதுதான் நடந்தது. ப்ரேமம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து பிரமோஷன் மேடைகளில் எங்கும் நாங்கள் பேச மாட்டோம் என்று இயக்குனர் சொன்னார்கள். ஆனால், படம் வந்த பிறகு என்னுடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேபோல்தான் லியோ படத்திலும் என்னுடைய ரோல் மக்கள் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement