இத்தனை வருடங்கள் கழித்து VIP படத்தால் நடிகர் தனுஷுக்கு வந்த நோட்டீஸ் – அதுவும் இந்த காட்சியால் தான் சர்ச்சை.

0
1062
dhanush
- Advertisement -

நடிகர் தனுஷின் விஐபி படத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து. இதனாலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியானது வேலையில்லா பட்டதாரி 2.

-விளம்பரம்-

இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருந்தார். ஆனால், வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்திற்கு கிடைத்த அளவிற்கு இரண்டாம் பாகத்துக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சி குறித்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்து உள்ளது. பொதுவாகவே படங்களில் புகை பிடிக்கும் மது அருந்தும் காட்சிகள் வரும் போது அதற்கான எச்சரிக்கை விளம்பரம் வருவது வழக்கம். அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும்.

- Advertisement -

அதில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை எனவும் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பர தடை சட்டத்தை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் விஐபி படம் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி இது சம்பந்தமாக தனுஷ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை விசாரித்த நீதிபதி கூறியது, புகையிலை மிக மோசமான பாதிப்பு தரும் பொருள். புகையால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் இந்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க பொது சுகாதார இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த புகாரின் மீது தமிழக அரசுக்கும் எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

-விளம்பரம்-
Advertisement