சர்கார் படத்திற்கு நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு..!திரையரங்குகள் ஷாக்..!

0
280
Sarkar

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம், `சர்கார்.’ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

sarkar

இந்நிலையில் மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுவதாகவும் கூறிருந்தார். எனவே, மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017-ல் உள்துறை செயலர் (சினிமா) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.