சரியாக பேச முடியாது, கேட்க முடியாது. இருப்பினும் கணவரின் துணையோடு 1 கோடி பரிசை வென்ற மாற்றுத்திறனாளி பெண்.

0
6901
kodeeswari
- Advertisement -

நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழிலும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழியில் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் தமிழில் இந்த நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கி இருந்தார். அவரை தொடர்ந்து சூர்யா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி என்று பலர் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் பெண்களுக்காக பிரத்யேகமாக கோடீஸ்வரி என்ற பெயரில் “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நிலையில் 120 மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் யாரும் இதுவரை முழுமையாக 30 கேள்விகளுக்கும் பதில் அளித்து 1 கோடி ரூபாயை வென்றது இல்லை. இந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளார், மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான கௌசல்யா என்பவர்.

இதையும் பாருங்க : இசையமைப்பாளருடன் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று ஆளே மாறியுள்ள சாமுராய் பட நடிகை.

- Advertisement -

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌசல்யா ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தார் . பின்னர் 15 கேள்விகளுக்கும் சாமர்த்தியமாக பதில் அளித்து கௌசல்யா கார்த்திகா கலர்ஸ் தமிழின் கோடீஸ்வரியில் `1 கோடி ஜாக்பாட்டை வென்றதால் இது தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக மாறியுள்ளது. அதவது உலகளவில் இந்த நிகழ்ச்சியில் 1 கோடி பரிசை வென்ற முதல் மாற்று திறனாளி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கௌசல்யா.

Related image

-விளம்பரம்-

ஒரு வயது குழந்தையின் தாய், கௌசல்யா செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உடையவர், மேலும் அதிர்வுகள், உதடு வாசிப்பு மற்றும் கணவரின் உதவியுடன் தொடர்பு கொள்கிறார். வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்ட கௌசல்யா , தனது பி.எஸ்சி, எம்.எஸ்சிக்கு பின்னர் எம்பிஏ பட்டம் முடித்து பல்கலைக்கழக முதலிடம் பெற்று சவாலான கல்வி பயணத்தின் மூலம் இவரை கண்டிருந்தார் மாவட்ட நீதிபதி . இன்று, அவர் மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிகிறார்.

கௌசல்யாவின் வெற்றி குறித்து பேசிய ராதிகா, தனது அறிவையும் உறுதியையும் கொண்டு இன்று வரலாற்றை உருவாக்கிய கௌசல்யாவுக்கு பல வாழ்த்துக்கள். நான் அவளை சந்தித்து அவளுடைய நம்பமுடியாத வெற்றியை அனுபவித்த அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். அவரது வெற்றி உண்மையிலேயே ஒரு உத்வேகம் மற்றும் பலரை ஊக்குவிக்கும். நான் அவளுக்கு வாழ்க்கையில் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த சாதனை அவளுடைய வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement