இசையமைப்பாளருடன் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று ஆளே மாறியுள்ள சாமுராய் பட நடிகை.

0
79969
jaya-seal

நடிகர் பிரபு தேவாவின் நடிப்பில் வெளி வந்த பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜெயா சீல். இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஜெயா சீல் அவர்கள் 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குவஹாத்தி பகுதியில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருக்கும் போதே சினிமா உலகிற்கு நுழைந்து விட்டார். இவர் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றவர். திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன கலைஞர், விளம்பரம் நடிகை, சீரியல் நடிகை என பல துறைகளில் பணி புரிந்து உள்ளார்.

Image result for jaya seal marriage

- Advertisement -

அசாமில் பிஹு நடனத்திற்காக இவர் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்டார். இவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்தும் உள்ளார். தமிழில் 2000 ஆண்டு எழில் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளி வந்த பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. பின் கலகலப்பு, சாமுராய் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை. அதோடு நடிகை ஜெயா சீல் அவர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, ஹிந்தி, அசாமி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : இரண்டு பக்கமும் காடு, ஒரே இருட்டு. நான் வண்டி பின்னாடி கத்திக்கிட்டே ஓடினேன் – மன்மத ராசா பாடகிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.

இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாததால் தொலைக்காட்சித் தொடர் நோக்கி பயணம் செய்தார். அதிலும் இவர் நடித்த கஹானி கர் கர் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயா சீல் அவர்கள் தபேலா வீரர் பிக்ரம் கோசை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிக்ரம் கோஷ் அவர்கள் மிகப் பிரபலமான கிளாசிக்கல் தபேலா பிளேயர் ஆவார்.

-விளம்பரம்-
Image result for jaya seal family

இவரை நடிகை ஜெயா சீல் அவர்கள் ஹொதத் நீரர் ஜானியோவின் செட்டில் தான் சந்தித்தார். பின் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இவருக்கு 56 வயது ஆகிறது. திருமணத்திற்கு குடும்பம் குட்டி என ஆளே மாறியுள்ளார் நடிகை ஜெயா சீல். கடந்த ஆண்டு இவர் பெங்காலி மொழியில் தவ்ஷோபூஜா- ஒரு துர்காசித்ரா படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

Advertisement