தயாரிப்பாளருக்கு அலுவலகம் கூட இல்லாமல் செய்த படத்திற்கு 3 ஆம் ஆண்டு விழாவா ? வறுத்தெடுத்த மெர்சல் பட மேஜிக் மேன்.

0
1341
raman
- Advertisement -

மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் தனக்கு இன்னும் சம்பள பாக்கி தரப்படவில்லை என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் வெளியாகி ஓராண்டிற்கு பின்னர் இந்த படம் சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரத்தை பெற்றது. அதே போல நடிகர் விஜய்க்கு இந்த படத்திற்கு 2018 ஆம் சிறந்த நடிகர் என்பதற்கான விருதை IARA விருதை கூட பெற்று இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு விஜய் மாஜிக் செய்யும் கலைஞசராக நடித்திருந்தார்.மேஜிக் கலைஞசராக நடித்திருந்த விஜய் அதற்காக 6 மாதத்திற்கும் மேலாக பிரபல மேஜிக் நிபுணர் ராமன் என்பவரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இதனை இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் படக்குழு தான் நடிகர் விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இந்த படத்தில் பணியாற்றிய ராமனுக்கு இன்னும் சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லையாம்.

- Advertisement -

இதுகுறித்து 2018 ஆம் ஆண்டு தெரிவித்த ராமன், நான் 6 மாத காலம் பணியாற்றினேன். ஆனால்,எனக்கு அந்த படத்தில் பணியாற்றியதற்காக முழுமையாக சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறி இருந்தார். அதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு மேஜிக் நிபுனர் ராமன் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவன மேலாளரிடம் போன் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதில் பேசிய அவர், நவம்பர் மாதத்தில் நீங்கள் கண்டிப்பாக எனக்கு பணத்தை தந்துவிடுவதாக கூறினீர்கள். இன்று டிசம்பர் 6. எனது சம்பள பாக்கிக்காக நான் நீண்ட நாட்கள் காத்திருப்பது உங்களுக்கு தெரியும். என்னைப்போல் இன்னும் பலருக்கு சம்பள பாக்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா? இன்னும் இரண்டு நாட்கள் காத்திருப்பேன். சம்பளம் வரவில்லையென்றால் நான் வீடியோ பதிவு போட்டுவிடுவேன் என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நிலையில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு நிறுவனத்தையொட்டி இந்த படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் மெர்சல் பட போஸ்டரில் புகைப்படத்தை பதிவிட்டு அனைத்து ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். இதை பார்த்து கடுப்பான மேஜிக் கலைஞர் ராமன், படத்தின் தயாரிப்பாளர் இன்னமும் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். அதுவும் அவர்களை நொறுக்கி அவர்களுக்கு அலுவலகம் கூட இல்லாமல் செய்த ஒரு படத்திற்காகவா? பல கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கும் ஒரு படத்திற்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement