ஜாதியை அவமதித்தாக விஜய் சேதுபதி மீது நீதிமன்றத்தில் வழக்கு. அதுவும் யார் பாருங்க.

0
521
vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்தார்.. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-
Man attacks Vijay Sethupathi and team at Bengaluru airport, no case  registered | The News Minute

- Advertisement -

அதற்கு விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மகா காந்தி பேட்டி கொடுத்து இருந்தார். அதில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல மகா காந்தி சென்றிருக்கிறார். பிறகு அவர் குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விஜய்சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதியை உதைத்ததாகவும் மகா காந்தி பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : என் அனுபவத்தில் இப்படி யாரும் காரணத்தை சொல்லி பார்த்தது இல்லை – ராஜுவை வறுத்தெடுத்த ஜேம்ஸ் வசந்தன்

இப்படி இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் சோஷியல் மீடியாவில் வந்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்ட மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடைய சாதனைகளை பாராட்டு தெரிவிப்பதற்காக அவரை அணுகியதாகவும்

-விளம்பரம்-

ஆனால், விஜய் சேதுபதி தன்னை இழிவுபடுத்தி பேசியதோடு தன்னுடைய ஜாதியை பற்றி தவறாக பேசியதாகவும், அது மட்டுமின்றி தனது மேலாளர் ஜான்சன் மூலமாக தன்னை காதில் அறைந்ததாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தன்னுடைய செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மறுநாள் ஊடகங்களில் விஜய் சேதுபதியை தான் தாக்கியதாக அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

Advertisement