எப்படி இருக்கிறது அப்பா -மகன் ஆட்டம் ‘மகான்’ முழு விமர்சனம் இதோ.

0
563
mahaan
- Advertisement -

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-
Image

கதைக்களம்:

சுதந்திரப்போராட்ட குடும்பத்தில் பிறக்கும் காந்தி மகான் சிறுவயதிலிருந்தே மதுவுக்கு எதிரான தீமைகளை சொல்லி வளர்க்கப்படுகிறான். இருந்தும் ஒரு கட்டத்தில் மது விற்பனை செய்யும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அவரது மகன் தாதாபாய் நௌரோஜி ஒரு ஐபிஎஸ் அதிகாரி. இதனால் அப்பா-மகன் இருவருக்கும் பிரச்சனை வருகிறது. கடைசியில் தனது மகனை காந்தி மகான் எப்படி சமாளித்தார்? மது விற்பனையில் இருந்து காந்திமகான் விலகினாரா? தன் தந்தைக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பது மகான் படத்தின் மீதி கதை. ‘தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே இல்லை’ என்ற காந்தியின் வசனத்துடன் தான் படம் துவங்குகிறது.

- Advertisement -

மேலும், படத்தில் காந்தி மகான் ஆக விக்ரம், தாதாபாய் நௌரோஜி கதாபாத்திரத்தில் துருவ், சத்யவானாக பாபி சிம்மா நடித்து இருக்கிறார்கள். அப்பா, மகனுக்கு இடையேயான மோதல் விறுவிறுப்பை கொண்டு சென்றிருக்கின்றது. கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற சுவாரசியமான கதையை மூன்று மணிநேர திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். வழக்கமான கதை .தான் கார்த்தி சுப்புராஜ் கையாண்டிருக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆயிரத்து 1960, 1993, 2013 2016 என்று ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்ப கதை நகர்கிறது. இருந்தும் ஒவ்வொரு காலகட்டத்தையும் நேர்த்தியாக இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

Image

ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கொடுத்த கதாபாத்திரத்தை எந்த குறையும் இல்லாமல் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் உடைய காந்தி மகான் கதாபாத்திரம் அற்புதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் காந்திமகான் ஆகவே விக்ரம் வாழ்ந்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க விக்ரமுக்காகவே பார்க்க தூண்டும் வகையில் அவருடைய கதாபாத்திரம் இருந்தது. அவருக்கு இணையாக அடுத்து பாபி சிம்ஹாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு ஒரு மாசான கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். துருவ் விக்ரம் தன்னுடைய வழக்கமான நடிப்பை காண்பித்திருக்கிறார். ஆனால், ஐபிஎஸ் அதிகாரி வேடம் அவருக்கு பொருந்தவில்லை என்று தான் சொல்லணும். அவர் மிக இளைஞராக தெரிவதால் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒரு கம்பீரம் அவருடைய தோற்றத்தில் இல்லை. ஆனால், நடிப்பில் பட்டையை கிளப்பி இருகிறார் துருவ். படத்தில் முதல் பாதி முழுவதும் மது வியாபாரத்தை பற்றி தான் செல்கிறது. இதில் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா எப்படி செயல்படுவார்கள் என்பதை காண்பித்து இருக்கிறது.

Image

அதுமட்டுமில்லாமல் மது வியாபாரத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்ன பாதிப்புகள் விளையும் என்பதை எல்லாம் காண்பித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அப்பா, மகன் மோதிக்கொள்ளும் காட்சிகள் அருமையாக இருக்கிறது. விக்ரம் தன்னுடைய அனுபவ நடிப்பை காண்பித்து இருப்பதால் துருவ் விக்ரமால் சமாளிக்க முடியவில்லை. அதேபோல் இரண்டாம் பாதி முழுக்க உணர்வுபூர்வமான காட்சிகள் இருப்பதால் கிளாப்ஸ் கிடைத்திருக்கிறது. பின் பாபிசிம்ஹா, விக்ரமுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் சண்டைகள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.

ஜகமே தந்திரம் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் விழுந்திருந்தாலும் மகான் படம் அவரை மீட்டெடுத்து இருக்கிறது. படத்தின் முதலில் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று வரும் வசனத்தை மூன்று மணி நேரமாக படமாக எடுத்திருக்கிறார்கள். அந்த அந்தளவுக்கு மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை படத்தில் பேசியிருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமின் மகான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Image

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

முதன் முதலாக விக்ரம் மற்றும் துருவ் சேர்ந்து நடிக்கும் படம் அற்புதமாக வந்திருக்கிறது. இவர்களது அணைத்து காட்சிகளும் வேற லெவல்.

படத்தில் விக்ரம் தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக காண்பித்திருக்கிறார்.

படத்திற்கு ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது.

Mahaan

குறைகள் :

படத்தின் நீளம் நிச்சயம் ஒரு குறை தான். இரண்டாம் பாதியை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

சில இடங்களில் தேவையில்லாத காட்சிகள் எல்லாம் காண்பித்திருக்கிறார்கள்.

சிம்பிளாக சொல்ல வேண்டிய கருத்தை கொஞ்சம் நீண்டு எடுத்து சென்றிருப்பது சலிப்படைய வைத்திருக்கிறது. மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் இல்லை.

இறுதி அலசல்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமின் மகான் படம் நன்றாக வந்து இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் விக்ரம் படத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களை நிச்சயம் இந்த படம் பூர்த்தி செய்துள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகது என்பதை தன் இரண்டாம் படத்திலேயே நிரூபித்துள்ளார் துருவ். சரியான இயக்குனரும், சரியான கதைத்தேர்வும் இனி துருவ்க்கு இருக்கும் என்றால் அவர் நிச்சயம் தந்தை பெயரை எடுப்பார் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் மகான் – ஞானியாகவில்லை என்றாலும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

Advertisement